சுற்றுலாச் செல்லும் முன்பாக பயணிகள் அனைவரும் முதன்மையாக யோசிக்கும் ஒரு விஷயம் ‘அந்த நாடு எவ்வளவு பாதுகாப்பானது?’ என்பதுதான். உலகிலுள்ள 195 நாடுகளில் பாதுகாப்பு அளவில் பெரிய வேறுபாடுகள் உள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் காப்பீட்டு ஒப்பிட்டுத் தளமான ‘ஸ்கொயர் மவுத்’ (Squaremouth) உலகம் முழுவதிலும் உள்ள 100 சுற்றுலாத் தலங்களை ஆய்வு செய்து, தனியாகப் பயணம் செய்ய உலகின் மிக பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
எகிப்து மன்னர்களின் கல்லறையில் இருந்த லிக்விட் தங்கம்… 3,000 வருஷமா எதும் ஆகலயாம்; இத சாப்பிடுவாங்களா?
அரசியல் ஸ்திரத்தன்மை, மனித வள மேம்பாட்டுக் குறியீடு மற்றும் தெருக்களின் பாதுகாப்பு, குற்றமின்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மதிப்பீடு கணக்கிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் 7 நாடுகள் ஐரோப்பாவிலும், 3 நாடுகள் ஆசியாவிலும் அமைந்துள்ளன.
சான் மரினோ (San Marino) – ஆபத்து குறியீடு 0.78 / 10
இத்தாலியின் நடுவே அமைந்துள்ள இந்தச் சிறிய நாடு உலகிலேயே மிகவும் பாதுகாப்பான இடமாக முதலிடம் பிடித்துள்ளது. இங்கு இரவிலும் பயமின்றி தெருக்களில் உலா வரலம். சிறந்த மருத்துவ வசதிகளும் இங்கு உண்டு.
அந்தோரா (Andorra) – ஆபத்து குறியீடு 1.33 / 10
ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் எல்லைக்கு நடுவே ‘பைரனீஸ்’ மலைத்தொடரில் அமைந்துள்ள குட்டி நாடு. வெறும் 85,000 மக்கள் தொகை கொண்ட இந்நாடு, இயற்கை எழில் கொஞ்சும் அமைதியான சூழலுக்குப் பெயர் பெற்றது.
சிங்கப்பூர் (Singapore) – ஆபத்து குறியீடு 1.56 / 10
ஆசிய கண்டத்தில் முதலிடத்தையும், உலகளவில் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. விதிவிலக்கான பாதுகாப்பு, குற்றமற்ற வீதிகள் மற்றும் சொக்கவைக்கும் தூய்மைக்குச் சிங்கப்பூர் பெயர் பெற்றது.
ஆஸ்திரியா (Austria) – ஆபத்து குறியீடு 1.74 / 10
ஐரோப்பாவின் மையத்தில் அமைந்துள்ள ஆஸ்திரியா, மனதை மயக்கும் ஆல்ப்ஸ் மலைகள், வளமான கலாச்சாரம் மற்றும் அதிகபட்ச பாதுகாப்பு சூழலைக் கொண்டுள்ளது.
செக் குடியரசு (Czech Republic) – ஆபத்து குறியீடு 1.77 / 10
ஆஸ்திரியாவிற்கு வடக்கே அமைந்துள்ள இந்நாடு, பழங்கால நடுத்தரக் காலக் கோட்டைகள் மற்றும் குறைந்த குற்ற விகிதத்திற்குப் புகழ் பெற்றது.
புருனை (Brunei) – ஆபத்து குறியீடு 1.85 / 10
போலினியோ தீவில் உள்ள இந்தச் சிறிய தென்கிழக்கு ஆசிய நாடு, இயற்கை மற்றும் கலாச்சாரம் சார்ந்த அமைதியான சுற்றுலா அனுபவத்தை வழங்குகிறது.
உலகில் 100% பாதுகாப்பான இடம் என்று எதுவுமே இல்லை என்றாலும், சோலோ டிராவல் (Solo Travel) செய்ய விரும்புபவர்களுக்கும், அமைதியான மற்றும் பாதுகாப்பான சுற்றுலாவை எதிர்பார்ப்பவர்களுக்கும் இந்தப் பட்டியல் சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
