சட்​டப்​பேர​வைத் தலை​வருக்கு எதி​ரான தீர்​மானத்​தில், த.வெ.க நிலைப்​பாட்​டுக்கு எதிராக வாக்​களிக்​க தனக்கு ரூ.35 கோடி வரை பேரம் பேசப்​பட்​ட​தாக ஊத்​தங்​கரை தொகுதி த.வெ.க எம்.​எல்.ஏ இளை​ய​ராஜா அளித்த புகாரின் அடிப்​படை​யில், சென்னை திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் வழக்​கு பதிவு செய்​து, இது​வரை 14 பேரை கைது செய்​துள்​ளனர்.இந்​த சம்​பவத்​தில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி மற்​றும் அவரது தம்பி அசோக்​குமார் ஆகியோ​ருக்​கும் தொடர்பு இருப்​ப​தாகக் கூறி இரு​வரை​யும் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை மேற்​கொண்​டனர்.
இந்த நாட்டுக்கு போனா; லாக்கரில் பூட்டி வச்ச மாதிரி சேஃபா இருப்பீங்க… எந்த டெஸ்டினேஷன் தெரியுமா?
இதையடுத்து, இரு​வரும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் முன்​ஜாமீன் கோரி மனு தாக்​கல் செய்​தனர். ​தொடர்ந்து, இரு​வருக்​கும் நிபந்​தனை முன்​ஜாமீன் வழங்கி நீதி​மன்​றம் உத்தரவிட்​டது. உத்​தரவு நகல் கிடைத்த 15 நாட்​களுக்​குள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்​றத்​தில் சரணடைய வேண்​டும். தலா ரூ.25 ஆயிரத்​துக்​கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்​கான இரு நபர் உத்​தர​வாத​மும் வழங்க வேண்​டும். தின​மும் காலை மற்றும் மாலை திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் ஆஜராகி கையெழுத்​திட வேண்டும் எனவும் நீதி​மன்​றம் தெரி​வித்​திருந்​தது.
இந்நிலையில், தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார். ரூ.25,000 பிணை செலுத்தி முன் ஜாமீன் பெற்ற அவர், நீதிமன்ற நிபந்தனைப்படி நாளை முதல் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலை என இரு வேளையும் ஆஜராகிக் கையெழுத்திடவுள்ளார். முன்னதாக செந்தில் பாலாஜி முன் ஜாமீன் பெற்றது குறிப்பிடத்தக்கது.
