இருந்த இடத்தில் இருந்தே நினைப்பவருக்கும் கூட முக்தியை தரும், அற்புதமான கோவில்களில் ஒன்று திருவண்ணாமலை. இங்கு வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று கிரிவலம் வருவது பாவங்களை போக்கி, பல மடங்கு அதிக புண்ணிய பலன்களை தரும் என்பது நம்பிக்கை. அதிலும் ஒரு வருடத்தில் வரும் மிக முக்கியமான பெளர்ணமிகளில் ஒன்றான ஆடி பெளர்ணமி நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து வழிபடுவதால் சிவபெருமானின் அருளுடன், திருமாலின் அருளும், அம்பிகையின் அருளும் சேர்ந்தே கிடைக்கும்.
திருவண்ணாமலை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கிரிவலம் வழிபாடு தான். பஞ்சபூத தலங்களில் நினைத்தாலே முக்தி தரும் புண்ணிய தலமான திருவண்ணாமலை தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான, பழமையான சிவாலயங்களில் ஒன்றாகும். ஆன்மீக பூமி, சித்தர்களின் பூமி என போற்றப்படும் திருவண்ணாமலையில் சிவனே மலையாக வீற்றிருப்பதாக ஐதீகம். அதனால் இங்கு மலையை வலம் வந்து வழிபடுவது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. இது சிவனையே வலம் வந்து வழிபட்டதற்கு சமமாக கருதப்படுகிறது. திருவண்ணாமலை கிரிவல பாதையில் 92 கோவில்கள் உள்ளன. இது தவிர ஜீவ சமாதிகள், குளங்கள், சித்தர்கள் தவம் செய்த குகைகள் என பல உள்ளன.
திருவண்ணாமலையில் வருடத்தின் 365 நாட்களும், 24 மணி நேரமும் கிரிவலம் செல்லலாம் என்றாலும் சில குறிப்பிட்ட நாள், நேரத்தில் கிரிவலம் வந்து வழிபடுவது மிக அதிகமான பலன்களை தரும் என சொல்லப்படுகிறது. கிழமை, திதி, நட்சத்திரம், மாதம், நேரம் ஆகியவற்றை பொருத்து நாம் கிரிவலம் செல்வதற்கானஜ பலன் மாறும் என சொல்லப்படுகிறது. இருந்தாலும் லட்சக்கணக்கான பக்தர்கள் பெளர்ணமி நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் ஒவ்வொரு மாதமும் எந்த நாளில் பெளர்ணமி வருகிறது, எப்போது கிரிவல வழிபாட்டினை துவக்கி, எப்போது நிறைவு செய்ய டவேண்டும் என்பதற்கான நேரத்தை அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் வெளியிட்டு வருகிறது.
ஜூலை 28ம் தேதி மாலை 07.30 மணிக்கு பிறகே பெளர்ணமி திதி துவங்குகிறது என்றாலும், அன்று தான் இரவு முழுவதும் பெளர்ணமி திதி உள்ளது. அதனால் ஆடி பெளர்ணமி கிரிவலத்தை ஜூலை 28ம் தேதி இரவு தான் மேற்கொள்ள வேண்டும். ஜூலை 29ம் தேதியன்று இரவு 9 மணிக்கு முன்பாகவே பெளர்ணமி திதி நிறைவடைந்து விடுவதால் அதை பெளர்ணமி இரவாக எடுத்துக் கொள்ள முடியாது.
ஆடி பெளர்ணமி திருவண்ணாமலை கிரிவலம் செல்ல ஏற்ற நேரம் :
ஆடி பெளர்ணமி 2026 தேதி ஜூலை 29 புதன் பெளர்ணமி திதி துவக்கம் ஜூலை 28ம் தேதி இரவு 07.33 பெளர்ணமி திதி நிறைவு ஜூலை 29ம் தேதி இரவு 08.58 கிரிவலம் துவங்க ஏற்ற நேரம் ஜூலை 28 காலை 07.27 கிரிவலம் நிறைவு செய்ய ஏற்ற நேரம் ஜூலை 29 காலை 08.54
ஆடி பெளர்ணமி கிரிவலம் சிறப்புகளும், பலன்களும் :
ஆடி பெளர்ணமி என்பது மற்ற பெளர்ணமிகளை போல் சாதாரணமான வழிபாட்டு நாள் கிடையாது. ஹரியும், ஹரனும் ஒன்றே என்பதை உலகிற்கு உணர்த்துவதற்காக அம்பிகை ஊசி முனையும், ஒற்றைக் காலில் பல ஆண்டுகள் கடும் தவம் இருந்து, அந்த பலனை சிவன் பாதி, விஷ்ணு பாதி என்ற திருமேனியாக சங்கர நாராயணர் திருக்கோலத்தில் காட்சி தந்த திருநாளாகும். அம்பாளின் தவம் வெற்றி அடைந்த நாள் என்பதால் இந்த நாளில் என்ன வேண்டிக் கொண்டாலும் அது நிச்சயம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
ஆடி பெளர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று வழிபட்டால் பல பிறவிகளாக தொடரும் கர்மவினைகளும், பாவங்களும் நீங்கும். மன அமைதி பெருகும். சிவ மந்திரத்தை உச்சரித்தபடி, சிவ சிந்தனையில் கிரிவலம் வந்தால் இறைவனின் பரிபூரண அருள் கிடைக்கும்.
செவ்வாய்கிழமை கிரிவலம் பலன்கள் :
செவ்வாய்கிழமையில் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் நீண்ட நாட்களாக உள்ள கடன் தொல்லைகள் நீங்கும். செல்வ வளம் பெருகும். வம்பு வழக்குகள் நல்ல தீர்வுக்கு வரும். ரத்தம் தொடர்பான நோய்கள், உடல்நலப் பிரச்சனைகள் தீரும். செவ்வாய் கிழமையில் கிரிவலம் வருவதால் கர்மவினைகள் நீங்குவதால் முக்தி கிடைக்கும். இந்த ஆண்டு ஆடி பெளர்ணமி கிரிவலம் நாளில் பூராடம் மற்றும் உத்திராடம் நட்சத்திரங்கள் இணைந்து வருகின்றன. இந்த நாளில் கிரிவலம் செய்வதால் காரிய வெற்றி ஏற்படும். பித்ரு தோஷ நிவர்த்தி ஏற்படும் என்பது ஐதீகம்.
Source link
