OTT: வீக் எண்ட் கம்மிங்… ஜூலை இறுதியை அதிர வைக்கும் ஓ.டி.டி ரிலீஸ் லிஸ்ட்

ஒவ்வொரு வாரமும் ஓ.டி.டி தளத்தில் புதுப் புது படங்கள் ரிலீஸாகுகின்றன. அப்படி ஜூலை எண்டிங்கை உங்கள் குடும்பத்துடன்கொண்டாட வைக்கும் நியூ ரிலீஸ் படங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

த.வெ.க எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசிய வழக்கு; செந்தில் பாலாஜி சகோதரர் சரண்

சூப்பர் கேர்ள்

கிரேக் கில்லெஸ்பி இயக்கத்தில் வெளியான படம் ‘சூப்பர் கேர்ள்’. இதில் சூப்பர் கேர்ளாக மில்லி அல்காக் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜூன் 26-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில், ‘சூப்பர் கேர்ள்’ திரைப்படம் ஓ.டி.டி-யில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை ப்ரைம் வீடியோ மற்றும் ஆப்பிள் டிவி ஓ.டி.டி தளத்தில் பார்க்கலாம். 

சின்ன சின்ன ஆசை

வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சின்ன சின்ன ஆசை’. 
வாரணாசியில் சந்திக்கும் வெவ்வேறு மொழிகளைப் பேசும் இரண்டு நபர்களின் பயணத்தையும் நட்பையும் இப்படம் விவரிக்கிறது. இப்படத்தில் இந்திரன்ஸ், மதுபாலா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் நாளை ஓ.டி.டி-யில் ரிலீஸாக உள்ளது. ஹாட் ஸ்டார், ஆஹா ஓ.டி.டி தளத்தில் பார்த்து மகிழுங்கள்

தி டெத் ஆஃப் ராபின் ஹுட்

மைக்கேல் சர்னோஸ்கி இயக்கத்தில் அமெரிக்க த்ரில்லர் படமாக வெளியான திரைப்படம் தான் ‘தி டெத் ஆஃப் ராபின் ஹுட்’. இந்த படத்தை ப்ரைம் வீடியோ ஓ.டி.டி தளத்தில் கட்டணம் செலுத்தி பார்க்கலாம்.

தி டெவில்ஸ் மவுத்

ஜெஃப் வாட்லோ இயக்கத்தில் வெளியான திரைப்படம் ’தி டெவில்ஸ் மவுத்’. இப்படம்  ஜூலை 29 அன்று ப்ரைம் வீடியோ ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

ஹார்ட் பீட்

ஹாட் ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் பார்வையாளர்களை அதிகம் ஈர்த்த வெப் தொடர் தான் ‘ஹார்ட் பீட்’. இந்த வெப் தொடரின் 3-வது சீசன் ஜூலை 30-ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் ரிலீஸாக உள்ளது.

செகண்ட் மேரேஜ்

ரவி தேஜா மகாதாசம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘செகண்ட் மேரேஜ்’ (Second Marriage) . இது கடந்த கால திருமண வாழ்க்கையின் கசப்புணர்வுகளை சுமந்து கொண்டு, இரண்டாம் திருமணம் மூலம் புதிய வாழ்க்கையை தொடங்கும் ஒரு ஜோடியின் உணர்வுபூர்வமான கதையைச் சொல்கிறது. இது இ.டி.வி வின் (ETV Win) ஓ.டி.டி தளத்தில் ஜூலை 30-ஆம் தேதி ரிலீஸாகுகிறது. 

கட்டா குஸ்தி 2

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் கடந்த 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘கட்டா குஸ்தி 2’. இப்படம் திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்திய நிலையில் வரும் 31-ஆம் தேதி நெட்பிளிக் ஓ.டி.டி தளத்தில் ரிலீஸாக உள்ளது.

Source link