மனுவோடு வாங்க… பணத்தோடு வராதீங்க… லஞ்சத்தை ஒழிக்க தாசில்தார் நடவடிக்கை

மானாமதுரை: மானாமதுரை தாலுகா அலுவலக அறிவிப்பு பலகையில் ‘கோரிக்கை மனுவுடன் வாங்க. பணம் வைத்திருந்தால் வரவேண்டாம் என லஞ்சத்தை ஒழிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் பட்டா மாறுதல், சான்றிதழ் பெறுதல், நில அளவை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வரும் மக்களிடம் அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை ஒருசிலர் லஞ்சம் வாங்குவதாகவும், இடைத்தரகர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. ​

இதனைத் தடுக்கும் விதமாக புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு லஞ்சத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாசில்தாராக பணியாற்றி வரும் கிருஷ்ணகுமார், தனது அலுவலகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், புரோக்கர்களின் நடமாட்டத்தை குறைக்கும் வகையிலும், அதிக பணத்துடன் வருபவர்களை தடுக்கவும் நடவடிக்கை எடுத்தார். அறிவிப்பு பலகைகளிலும் தாலுகா அலுவலக சுற்றுச்சுவர்களிலும்

வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் மக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களுடன் மட்டுமே வர வேண்டும். பணம் வைத்திருப்பவர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை என்ற நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்கள் இருவர் ‘எதற்காக வருகிறீர்கள் . பணம் ஏதும் வைத்துள்ளீர்களா ‘என விசாரணை செய்து மக்களை உள்ளே அனுப்பி வருகின்றனர். இதனை பலரும் வரவேற்றுள்ளனர்.

Source link