தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் உலக நாடுகளை வியக்க வைக்கும் சீனா, தற்போது தனது முக்கிய நகரங்களில் உள்ள ரயில் மற்றும் மெட்ரோ நிலையங்களைச் சுற்றி பிரம்மாண்டமான நிலத்தடி வணிக வளாகங்களைஅமைத்து சாதனை படைத்துள்ளது.
இந்த நாட்டுக்கு போனா; லாக்கரில் பூட்டி வச்ச மாதிரி சேஃபா இருப்பீங்க… எந்த டெஸ்டினேஷன் தெரியுமா?
ரயில் நிலையத்துடன் நேரடியாக இணைப்பு
சீனாவின் குவாங்சோ (Guangzhou), ஷென்சென் (Shenzhen), ஷாங்காய் மற்றும் செங்சோ (Zhengzhou) போன்ற முக்கிய நகரங்களில் அமைந்துள்ள அதிவேக ரயில் மற்றும் மெட்ரோ நிலையங்களின் கீழேயே இந்த நிலத்தடி வணிக வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் ரயிலை விட்டு இறங்கியவுடனேயே, வெளியே செல்லாமல் நிலத்தடி பாதைகள் வழியாக நேரடியாக இந்த ஷாப்பிங் மால்களுக்குள் செல்ல முடியும்.
காலநிலை கட்டுப்பாடு : கோடைகால வெயில் அல்லது கடும் குளிர், மழை எதுவாக இருந்தாலும் பயணிகள் சௌகரியமாகச் சென்று வர முழுமையான ஏசி வசதியுடன் கூடிய அமைப்பாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில்: உலகத்தரம் வாய்ந்த துணிக்கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள், பிரம்மாண்ட உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் இதில் அடங்கும்.
சிறிய அளவிலான தொடர்வண்டி: சில நிலத்தடி மால்களில் பயணிகள் சுற்றிப்பார்ப்பதற்காக மாலினுள்ளேயே சிறிய ரயில்களும் இயக்கப்படுகின்றன.
பழங்கால & நவீன கலாச்சார தீம்கள்
சீனாவின் பழங்கால தெருக்களைப் போன்ற வடிவமைப்புகள், அனிமேஷன் மற்றும் விளையாட்டு மண்டலங்கள் எனப் பல தீம்களில் இவை கட்டப்பட்டுள்ளன.
நிலப் பற்றாக்குறைக்குத் தீர்வு
நகரங்களில் நிலத்தின் மதிப்பு அதிகமாக உள்ளதால், பூமிக்கு அடியில் இருக்கும் இடத்தைச் சரியாகப் பயன்படுத்தி வணிக மையங்களை உருவாக்கியுள்ளனர்.
போக்குவரத்து நெரிசல் குறைப்பு
பயணிகள் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறி வீதிகளில் செல்வதைத் தவிர்த்து, நிலத்தடியிலேயே தங்களின் ஷாப்பிங் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடிவதால் வீதிகளில் கூட்டம் குறைகிறது.
பயணிகளுக்கு வசதி
ரயிலுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் பயணிகள் நிலத்தடி மால்களில் நேரத்தைச் செலவழிக்க முடிகிறது. பூமியின் மேற்பரப்பில் மட்டுமின்றி, பூமிக்கு அடியிலும் ஒரு தனி நகரத்தையே உருவாக்கி இயக்கி வரும் சீனாவின் இந்த கட்டமைப்பு மாடல், உலகளவில் நகர்ப்புற திட்டமிடலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகப் பார்க்கப்படுகிறது.
