சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 28) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1240 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 720 ரூபாய்க்கும், கிராமுக்கு 155 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 215 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 25) ஆபரண தங்கம் கிராம், 13,300 ரூபாய்க்கும், சவரன், 1,06,400 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 240 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக் கிழமை, தங்க சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே, ஆபரணங்கள் விற்பனையாகின.
நேற்றைய நிலவரம்
நேற்று (ஜூலை 27) தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் உயர்ந்து, 13,370 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, 1,06,960 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (ஜூலை 28) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1240 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 720 ரூபாய்க்கும், கிராமுக்கு 155 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 215 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியும் சரிவு
வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 235 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
