மாலியில் கடத்தப்பட்ட இந்திய வைர வியாபாரியை ரூ.44 கோடி பிணயத் தொகை கொடுத்து மீட்ட குடும்பத்தினர்

சூரத்: மாலி​யில் கடத்​தப்​பட்ட 75 வயது இந்திய வம்சாவளி வைர வியாபாரியை, அவரது குடும்​பத்​தினர் ரூ.44 கோடி பிண​யத் தொகை செலுத்தி மீட்​டுள்​ளனர்.

குஜ​ராத் மாநிலம் அம்​ரேலி மாவட்​டம் தார் கிராமத்​தைச் சேர்ந்​தவர் தீரு ரமணி (75). அவர் 1980 முதல் வைர தொழிலில் ஈடு​பட்டு வரு​கிறார். சில ஆண்​டு​களுக்கு முன்பு அவர் அமெரிக்​கா​வில் குடியேறி​னார். அங்கு அவரது குடும்​பத்​தினர் வைர வணி​கத்​தில் ஈடு​பட்டு வந்​தனர்.

மேற்கு ஆப்​பிரிக்க நாடான மாலி​யில் உள்ள ஒரு தங்​கச் சுரங்கத்தை சமீபத்​தில் கையகப்​படுத்​திய ரமணி, சில மாதங்களாக அங்கு வசித்து வந்​தார். இந்​நிலை​யில், கடந்த ஏப்​ரல் மாதம் அவர் மர்ம கும்​பலால் கடத்​தப்​பட்​டார்.

பின்​னர் அமெரிக்​கா​வில் வசிக்​கும் அவருடைய குடும்​பத்​தினரை தொடர்​பு​கொண்ட கடத்​தல்​காரர்​கள், ரமணியை விடுவிக்க சுமார் 100 கோடி ரூபாய் கேட்​டுள்​ளனர். ஆனால் பேச்​சு​வார்த்தை நடத்தி ரூ.44 கோடி கொடுத்து அவரை மீட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. கடத்​தல்​காரர்​களால் விடுவிக்​கப்​பட்ட ரமணி, இன்​னும் மாலி​யில்​தான் இருக்​கிறார். உள்​ளூர் காவல் துறை​யினர் அவரிடம் விசா​ரணை நடத்தி வரு​கின்றனர்.

Source link