தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக அறியப்படுபவர் ராம் சரண். இவர் சில ஆண்டுகளுக்கு வெளியான ’ஆர்ஆர்ஆர்’ படத்தின் மூலமாகத் தேசிய அளவில் கவனம் பெற்ற நடிகராக மாறியிருக்கிறார், அப்படத்தைத் தொடர்ந்து இவரது ஒவ்வொரு படமும் தேசிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படமாக அமைந்துள்ளது.
அந்த வகையில் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியின் படம் பெத்தி. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்று, கவனம் பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது, அப்போது சண்டைக் காட்சிகளில் நடிக்கும் போது, இவரது கை மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
இருப்பினும், அவர் அதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தார். படப்பிடிப்பு பணிகள் உள்ளிட்ட காரணங்களால் இந்த கால தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், காயத்திற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ள ராம் சரண் முயற்சி எடுத்தார். அப்போது, மருத்துவமனையில் அவருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில், அவருக்குக் கையில் தசை நார் கிழிவு மற்றும் எலும்பு பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தசை நார் கிழிந்துள்ளதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இந்நிலையில், இந்திய அளவில் தசைநார் அறுவை சிகிச்சை செய்யச் சிறப்பான மருத்துவமனை தமிழ்நாட்டில் கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை தான் என்று தெரியவந்தது. அதன்படி, அவர் கோவையில் உள்ள பிரபல மருத்துவமனைக்குத் தனி விமானம் மூலமாக வந்தடைந்தார்.
மருத்துவமனையில் அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்பு, 4 முதல் 6 வாரங்கள் வரை ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே, சில நாட்கள் அவர் மருத்துவமனையிலேயே ஓய்வெடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இந்த சம்பவம் குறித்த தகவல் சமூக வலைத்தலங்களில் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் பலரும் அவருக்கு விரைவில் குணம் பெறுமாறு வேண்டிக் கொண்டு கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
