365 நாளும் பளபளக்கும் தொப்பை… இந்த போலீஸின் வயிற்றை தடவினால்; அதிர்ஷ்டம் கூரைய பிச்சிட்டு கொட்டும்

ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட் (Budapest) நகருக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், அங்கிருக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்கலச் சிலையைத் தேடிச் சென்று அதன் தொப்பையைத் தடவிப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். “தி ஃபேட் போலீஸ்மேன்” (The Fat Policeman) அல்லது “இஸ்த்வான்” (István) என்று அழைக்கப்படும் இந்தச் சிலை, இன்று பயணிகள் மத்தியில் ஒரு முக்கியமான சுற்றுலா ஈர்ப்பாக மாறியுள்ளது.

6% வட்டி; 2 நாள் முன்னாடியே சம்பளம்: எக்ஸ் பயனர்களுக்கு செம ஆஃபர்… எலான் மஸ்க் அடித்த மாஸ் சிக்ஸர்

இந்தச் சிலையின் வரலாறு என்ன?

இந்தச் சிலையை பிரபல சிற்பி ஆண்ட்ராஸ் லபிஸ் வடிவமைத்தார். 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (1900-களின் தொடக்கம்) ஆஸ்திரியா – ஹங்கேரி பேரரசு காலத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரியின் சீருடை மற்றும் தோற்றத்தை மையமாகக் கொண்டு இந்தச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. புடாபெஸ்ட்டில் உள்ள ‘செயின்ட் ஸ்டீபன் பசிலிக்கா’ (St. Stephen’s Basilica) தேவாலயத்திற்கு மிக அருகில் உள்ள ஜ்ரீனி தெருவில் (Zrínyi Street) இந்தச் சிலை அமைந்துள்ளது.

தொப்பையைத் தொட்டால் அதிர்ஷ்டமா?

சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே இந்தச் சிலையைச் சுற்றி ஒரு சுவாரஸ்யமான நம்பிக்கை நிலவுகிறது. அதாவது இந்தத் தொப்பை போலீஸின் தொப்பையைத் தடவினால் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருகும், பணம் மற்றும் செல்வம் சேரும் என்றும் நம்பப்படுகிறது. இந்தச் சிலையைத் தொட்டு வேண்டிக்கொண்டால், பயணம் பாதுகாப்பாக அமையும் என்றும், உணவில் எப்போதுமே பஞ்சம் இருக்காது என்றும் பயணிகள் நம்புகின்றனர்.

பளபளக்கும் தொப்பை

ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் வந்து இந்தச் சிலையின் தொப்பையைத் தொட்டுத் தடவுவதால், சிலையின் பிற பகுதிகளை விட அதன் தொப்பை பகுதி மட்டும் தனியாகப் பளபளப்பாக பிரகாசிக்கிறது.

சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடம்

இன்று புடாபெஸ்ட் செல்லும் பயணிகள் அனைவரும் இந்தச் சிலையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதையும், அதன் தொப்பையைத் தடவி அதிர்ஷ்டம் வேண்டிச் செல்வதையும் ஒரு பாரம்பரியமாகவே பின்பற்றி வருகின்றனர். பழங்கால வரலாற்றையும், நகைச்சுவையான நாட்டுப்புற நம்பிக்கையையும் ஒன்றாகக் கலந்து நிற்கும் இந்த ‘தொப்பை போலீஸ் சிலை’ புடாபெஸ்ட் நகரின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.



Source link