சென்னை: சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் மணிமாறன் கைது செய்யப்பட்டார்.
சென்னை வேளச்சேரியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை பாலியல் ரீதியாக ராணிப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு இன்ஸ்பெக்டர் மணிமாறன் துன்புறுத்தலில் ஈடுபட்டு இருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர் குடிபோதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
