Kendra Drishti Yoga Effects,குரு பூர்ணிமாவில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: 4 ராசிகளுக்கு செல்வ வளமும் குடும்பத்தில் சுப நிகழ்வுகளுக்கும் வாய்ப்பு – guru purnima 2026: kendra drishti yoga may bring financial growth and family auspiciousness for four zodiac signs

ஆனி மாதம் பௌர்ணமி தினத்தை குருபூர்ணிமா என கொண்டாடப்படுகிறது. இந்த அற்புதமான நாள் ஜூலை 29ஆம் தேதி, புதன்கிழமை வருகிறது. இந்த நாளில் ஜோதிடத்தில் சில கிரகங்களின் சேர்க்கை மற்றும் அமைப்பால் உருவாகக்கூடிய ‘கேந்திர திருஷ்டி யோகம்’ மிகவும் சுகமான மற்றும் சக்தி வாய்ந்த உடனே தரக்கூடியதாக இருக்கும். இதனால் குறிப்பிடத்தக்க சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமும், அவர்களுடைய செல்வநிலை உயரவும், வேலை, தொழிலிலும் முன்னேற்றம், சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும்.

குரு பூர்ணிமா தினத்தில் அதிர்ஷ்டம் பெறக்கூடிய ராசிகள்
இந்த வருடத்தின் படி செவ்வாய் மற்றும் சுக்கிரன் 90 டிகிரி கோணத்தில் வரும்போது ‘ கேந்திர திருஷ்டி யோகம்’ உருவாகும். அற்புதமான யோகத்தால் சுக்கிரன் தரக்கூடிய சுகபோகங்கள், செல்வம், திருமண வாழ்க்கை சுகமும், செவ்வாய் பகவான் தரக்கூடிய தைரியம், வலிமை, ஆற்றல் போன்ற அற்புதமான பலனை ஜூலை 29ஆம் தேதி வரக்கூடிய குரு பூர்ணிமா தினத்தில் இந்த யோகம் ஏற்படுகிறது. இந்த அற்புத யோகத்தால் சில ராசிகளின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும், வேலை, தொழிலில் முன்னேற்றமும் ஏற்படும்.

மேஷ ராசி

மேஷ ராசி நண்பர்களுக்கு கேந்திர திருஷ்டி யோகத்தால் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு, நீங்கள் திட்டமிட்டுள்ள பணிகளை திறமையுடன் செய்து முடிப்பீர்கள். உங்களின் தொழிலில் வளர்ச்சியும் புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு பெறுவார்கள்.வணிகத்தில் தாமகரமான ஒப்பந்தங்கள் பெறலாம். நிதி நிலைமை மேம்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். திருமண வாழ்க்கையில் இருப்பவர்கள் மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள்.
நீங்கள் ஏதேனும் தொழில் செய்பவராக இருந்தால் முக்கிய முடிவுகள் எடுப்பதில் மனம் தைரியமாக இருக்கும். உங்களுடைய திருமண வாழ்க்கையில் இணக்க நிலை அதிகரிக்கும். ஆரோக்கியம் வழக்கத்தைவிட சிறப்பாக இருக்கும்.

சிம்ம ராசி

சிம்ம ராசி அன்பர்களுக்கு இந்த குரு பூர்ணிமா நாளில் உருவாகக்கூடிய அற்புத யோகம் முன்னேற்றத்தையும், வெற்றியையும் வாரி வழங்கும். பணியிடத்தில் மேற்கொள்ளக்கூடிய கடின உழைப்பிற்கான நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். சிலருக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் பெற வாய்ப்பு உள்ளது. வணிகம் தொடர்பாக கணிசமான லாபத்தை பெறுபவர்கள்.

உங்கள் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். அதன் மூலம் புதிய வாய்ப்புகள் பெறுவீர்கள். நிதிநிலை வலுவாக இருக்கும். சிலரிடம் முடங்கி கிடக்கக்கூடிய உங்கள் பணம் திரும்ப கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவுவதோடு, வாழ்க்கை துணையுடன் பிணைப்பு அதிகரிக்கும். சமூகத்தில் உங்களுடைய அந்தஸ்து மரியாதை அதிகரிக்கும்.

கன்னி ராசி

கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த கேந்திர திருஷ்டி யோக அருளால், உங்களுடைய கடின உழைப்பிற்கான முழு பலனை அனுபவிப்பீர்கள். உங்களுடைய தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முன்னேற்றமும், சில விஷயங்களில் சாதனையும் படைக்க வாய்ப்பு உண்டு. நீண்ட காலமாக தடைபட்டு வந்த திட்டங்கள் நிறைவேறும். நிதி விவகாரங்கள் சாதகமாக இருக்கும். தன வரவு மேம்படும்.

பணியிடத்தில் திறமையை நிரூபிக்கவும், வேலையை வேகமாக முடிக்கவும் ஆற்றலுடன் செயல்படுவீர்கள். இது உங்களுக்கான மரியாதையே பெற்றுத்தரும். மாணவர்கள் படிப்பு மற்றும் போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

துலாம் ராசி

துலாம் ராசி நண்பர்களுக்கு இந்த கேந்திர திருஷ்டி யோகம் காரணமாக பல விதத்தில் அதிர்ஷ்ட பலனை அனுபவிப்பீர்கள். நீங்கள் செய்யக்கூடிய வேலை அல்லது வணிகம் தொடர்பாக துறை ரீதியான முன்னேற்றம் நீங்கள் பெறுவீர்கள். புதிய வேலைவாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். நீதி நிலைமை சிறப்பான முன்னேற்றம் அடையும். சிலருக்கு புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கப் பெறலாம்.

நீங்கள் முதலீடு தொடர்பான விஷயங்களில் நிபுணர்களின் ஆலோசனை பெற்ற செயல்பட்டால் எதிர்காலத்தில் நல்ல லாபகத்தை எதிர்பார்க்கலாம். புதிய தொழில் தொடங்க அல்லது உங்கள் தொழிலை விரிவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும். குடும்ப வாழ்க்கையில் இணக்கமான மன சூழல் உருவாகும். உங்கள் வாழ்க்கை துணையின் ஆதரவு க்கும் அதிகரிக்கும்.

குறிப்பு:

இங்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து ஜோதிடத் தகவல்களும் தீர்வுகளும் ஜோதிடம் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றிற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இத்தகவல்களைக் கருத்தில் கொண்டு முழுமையான விவரங்களைப் பெற, தொடர்புடைய நிபுணரை அணுகுவது நல்லது.

Source link