தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மேகதாது அணை கூடாது: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய விஜய்

மேகதாது அணை கட்ட தமிழக ஒப்புதல் தேவையில்லை என்ற பதிலுக்கு முதலமைச்சர் விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில், கர்நாடகா காவிரி குறுக்கே அமைப்பை உருவாக்க கீழ்ப்படியான மாநிலங்களின் ஒப்புதல் பெற தேவையில்லை என்ற நீர்வளத்துறை பதிலை திரும்ப பெற வேண்டும். 2018-ம் ஆண்டு சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு குறித்த மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் கருத்து ஏமாற்றமளிக்கும் பதில். மேகதாது அணை திட்டத்துக்கு எந்தவித சட்டப்பூர்வ அல்லது நிர்வாக அனுமதியும் வழங்கக் கூடாது.

காவிரி என்பது வெறும் நீர் ஆதாரம் மட்டுமல்ல, லட்சக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரம்.கடைமடை மாநில அனுமதியின்றி மேலே உள்ள மாநிலம் அணை கட்ட முடியாது. நீர்வளத்துறை இணைமந்திரி அளித்த பதிலை திரும்ப பெற உத்திரவிட வேண்டும். தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நீரின் அளவு, நீர்வரத்து சீராக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். மேகதாது அணைக்கு எந்த அனுமதி தரக்கூடாது. முழுமையான தொழில்நுட்ப, சட்டப்பூர்வ ஆய்வுக்கு பிறகே இத்திட்டம் குறித்து முடிவு எடுக்கப்பட வேண்டும்.தமிழகம் ஒப்புதலின்றி கட்டுமானம் கூடாது. கீழ்பாசன மாநிலங்களுக்கு செல்லும் நீரின் அளவு பாதிக்கும் திட்டத்தை ஒப்புதலின்றி செயல்படுத்த முடியாது. மேகதாது அணை திட்டத்துக்கு எந்தவித சட்டப்பூர்வ அல்லது நிர்வாக அனுமதியும் வழங்கக்கூடாது. மேக தாது விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என்று விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, மாநிலங்களவையில் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பூஷன் சௌத்ரி, காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்வதற்கு முன்பு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி போன்ற எந்த மாநில அரசின் ஒப்புதலையும் கர்நாடகா பெறவேண்டும் என்ற அவசியமில்லை என 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார். இதுபோன்ற திட்டங்களுக்கு கீழ்நிலை ஆற்று மாநிலங்களிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற எந்த விதியும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Source link