கரூர் பணி ஆணை ரத்து விவகாரம்: `நீதிமன்ற உத்தரவு நகல் வந்தவுடன்…'- அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்

தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தியை சீரமைக்க வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக சென்னை ஐஐடி-யில் மின்சாரத்துறை அமைச்சர், லித்தியம், வெனாடியம் மற்றும் சோடியம் பேட்டரி தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “பேட்டரி பயன்பாடு, சேமிப்பு அளவு மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான புதிய கொள்கை (Policy) ஐஐடி வல்லுநர்களுடன் இணைந்து இன்னும் சில வாரங்களில் உருவாக்கப்பட்டு வெளியிடப்படும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

கடந்த காலங்களில் வீட்டு உபயோகச் சோலார் அமைப்பதில் பல்வேறு தடங்கல்களும் முறைகேடுகளும் நிலவியதால், மற்ற மாநிலங்களை விடத் தமிழகம் இதில் பின்தங்கியிருந்தது. இந்த நிலையை மாற்ற, தனி நபர் வீடுகளில் கூரை மேல் சோலார் அமைப்பதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சோலார் உள்ளிட்ட பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் TNEB மூலம் ஒரே செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க மட்டுமே அனுமதித்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகங்களின் முறையான அனுமதி இன்றி கர்நாடக அரசால் எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள முடியாது. தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அடுத்தகட்ட சட்டப் போராட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் பலதரப்பட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ முடிவுகளை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார்.

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரசு வேலை தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவின் நகல் கிடைத்தவுடன், வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்துச் சட்டப்பூர்வமாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள் பலனடையும் வகையில் அந்த நடவடிக்கை இருக்கும் என நம்புகிறோம்.” என்றார்.

Source link