சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, ஹர்திக் பாண்டியாவை வாங்கும் பேச்சு வார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் வைக்கும் கோரிக்கையை முழுமையாக ஏற்க சிஎஸ்கே நிர்வாகம் தயக்கம் காட்டி வருகிறது.
என்ன காரணம்? ஹர்திக் பாண்டியா வேண்டும் என்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், ஹர்திக்கிற்கு மாற்றாக ஷிவம் துபே மற்றும் டிவோல்ட் பிரேவிஸ் ஆகியோரை விட்டுக்கொடுக்க வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், கண்டிஷன் போட்டுள்ளது. மேலும், 10 கோடி ரூபாயையும் தர வேண்டும் என கேட்டுள்ளார்களாம்.
இதில், 10 கோடி ரூபாயை கொடுக்க முடியாது என்ற முடிவில் சிஎஸ்கே நிர்வாகம் இருக்கிறது. மேலும், ஷிவம் துபே, டிவோல்ட் பிரேவிஸை கொடுக்கவும் ஒப்புக் கொண்டுள்ளார்களாம். ஆனால், பிரேவிஸுக்கு மாற்றாக வில் ஜாக்ஸ் வேண்டும் என மும்பை இந்தியன்ஸிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஒருவேளை, வில் ஜாக்ஸை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் விட்டுக்கொடுக்க மறுத்தால், அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இருந்து, தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் டெனோவன் பெர்ரிராவை வாங்க சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாம். டெனோவன் பெர்ரிரா, ராஜஸ்தான் ராயல்ஸுக்கு மிகமுக்கியமான வீரராக இருக்கிறார். இவரை, ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம், சுலபமாக விட்டுக்கொடுக்காது. மாற்றாக, ஒரு தரமான வீரரை எதிர்பார்க்கும். குறிப்பாக, உர்வில் படேலை கேட்க வாய்ப்புள்ளது.
ஒருவேளை, ராஜஸ்தான் ராயல்ஸும் கைவிட்டால், ஐபிஎல் 2027 சீசனுக்கான ஏலத்தில், இங்கிலாந்து பேட்டர் ஹேரி ப்ரூக்கை வாங்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர் ஆகியோரை விடுவித்தாலே, பெரிய தொகை கிடைக்கும். இதனை வைத்து, சிஎஸ்கேவால் ப்ரூக்கை சுலபமாக வாங்க முடியும்.
இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி கேட்டபடியை ஷிவம் துபே, டிவோல்ட் பிரேவிஸ் ஆகியோரை விடுவிக்க சிஎஸ்கே நிர்வாகம் முன் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், 10 கோடி ரூபாயை தர முடியாது என்ற முடிவில் சிஎஸ்கே நிர்வாகம் இருக்கிறது. அதுபோக, இன்னமும் டிரேடிங் கட்டணம் வேறு உள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்காக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், எவ்வளவு தொகையை டிரேடிங் கட்டணமாக நிர்ணயிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
கெடு விதித்த மும்பை இந்தியன்ஸ்: ஹர்திக் பாண்டியா டிரேடிங் தொடர்பாக, ஆகஸ்ட் முதல் வாரம் வரை மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்த முடியும் என்ற முடிவில், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் இருக்கிறதாம். ஒருவேளை, சிஎஸ்கே நிர்வாகத்துடன் டிரேடிங் பேச்சு வார்த்தை சரிபடவில்லை என்றால், அடுத்து டெல்லி கேபிடல்ஸுடன் பேச்சு வார்த்தையை நடத்த மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
டெல்லி கேபிடல்ஸிடம் இருந்து அக்சர் படேலுடன், ஒரு தரமான வீரரை வாங்கிவிட்டு, மாற்றாக ஹர்திக் பாண்டியாவை கொடுக்கும் முடிவில் மும்பை இந்தியன்ஸ் இருக்கிறதாம். இதனால், ஹர்திக் சிஎஸ்கே வருவாரா இல்லையா என்பது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், அடுத்து சூர்யகுமார் யாதவையும் டிரேடிங் செய்ய உள்ளார்களாம்.
