நாம் விமானங்களில் பயணம் செய்யும்போது நமது லக்கேஜ்களின் எடையை மிகவும் கவனமாகப் பார்ப்போம். ஆனால், ரயில் பயணங்களிலும் லக்கேஜ்களுக்கு ஒரு குறிப்பிட்ட எடை வரம்பு உண்டு என்பது பலருக்குத் தெரிவதில்லை. ரயில்களில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் (Confirmed Ticket) இருந்தாலே நாம் எவ்வளவு லக்கேஜ் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்று பெரும்பாலானோர் நினைக்கின்றனர். நீங்களும் அப்படி நினைத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில், ரயில்வே விதிகளின்படி, அனுமதிக்கப்பட்ட எடையை விடக் கூடுதலாக லக்கேஜ் எடுத்துச் சென்றால், சாதாரண கட்டணத்தை விட ஆறு மடங்கு வரை அபராதம் விதிக்கப்படலாம்.
ரயிலில் எவ்வளவு சாமான்கள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றன மற்றும் கூடுதல் சாமான்கள் இருந்தால் என்ன செய்வது என்பது இங்கே பார்க்கலாம்.
எந்த வகுப்பில் (Class) எவ்வளவு எடை இலவசம்?
இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காக பல்வேறு பெட்டிகள்/வகுப்புகளுக்கு ஏற்ப இலவச சாமான்களின் எடையை நிர்ணயித்துள்ளது:
ஸ்லீப்பர் கிளாஸ் (Sleeper Class) மற்றும் 3வது ஏசி (3rd AC): நீங்கள் உங்களுடன் 40 கிலோ வரை சாமான்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம்.
2வது ஏசி (2nd AC): இதில் இலவச சாமான்களின் வரம்பு 50 கிலோ ஆகும்.
1வது ஏசி (1st AC): முதல் ஏசி வகுப்பில் அதிகபட்சமாக 70 கிலோ வரை சாமான்களைக் கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.
கூடுதல் லக்கேஜ் இருந்தால் என்ன செய்வது?
உங்கள் சாமான்கள் அனுமதிக்கப்பட்ட எடையைத் தாண்டினால் கவலைப்படத் தேவையில்லை. ரயிலில் ஏறுவதற்கு முன், ரயில் நிலையத்தின் சாமான்கள் அலுவலகத்திற்கு (Luggage Office) செல்ல வேண்டும். அங்கு உங்கள் கூடுதல் சாமான்களை முன்பதிவு செய்து, அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இதன் மூலம் உங்கள் சாமான்களை எந்தவிதத் தொல்லையும் இல்லாமல் எடுத்துச் செல்ல முடியும்.
முன்பதிவு செய்யாமல் கூடுதல் சாமான்களுடன் பிடிபட்டால், ரயில்வே நிர்வாகம் சாதாரண கட்டணத்தை விட ஆறு மடங்கு வரை அபராதம் விதிக்கலாம். ரயில் பயணம் நெரிசல் நிறைந்ததாக இருப்பது வழக்கம். நீங்கள் குழந்தைகளுடனோ அல்லது முதியவர்களுடனோ பயணம் செய்தால், முடிந்தவரை குறைந்த அளவிலான சாமான்களை எடுத்துச் செல்வது நல்லது. ஒருவேளை நீங்கள் அதிக எடையுள்ள அல்லது பெரிய பொருட்களைக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தால் அவற்றை நீங்களே சுமந்து செல்வதை விட ரயில்வே பார்சல் சேவையைப் பயன்படுத்துவது சிறந்த வழியாக இருக்கும்.
ரயில் பயணிகளுக்கு ரூல்ஸ் ரொம்ப முக்கியம்!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் அடிக்கடி ரயில் பயணம் செய்கின்றனர். குறிப்பாக மிடில் கிளாஸ் மக்களின் பிரதான போக்குவரத்து ஊடகமாக ரயில்கள் உள்ளன. எனவே ரயில்வே தொடர்பான முக்கியமான விதிமுறைகள் பற்றி பயணிகள் கட்டாயம் தெரிருந்திருக்க வேண்டும். சில விதிமுறைகள் பயணிகளுக்கு சலுகைகளையும், சில விதிமுறைகள் பயணிகளுக்கு நெரிக்கடிகளையும் வழங்கலாம். எனினும் இதுபோன்ற விதிமுறைகள் ரயில் பயணத்தை சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் மாற்றவும்தான் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றை ரயில் பயணிகள் அனைவரும் பின்பற்றியே ஆக வேண்டும். இல்லாவிட்டால் வீண் சிரமங்களை சந்திக்க நேரிடலாம்.
Source link
