எகிப்து தங்க உலகத்தை பார்க்க படை எடுக்கும் மக்கள்… 48 மணி நேரம் தான் கெடு; இந்தியர்களை ஒதுக்கி வைத்த அரசு

சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் நுழைவு நடைமுறைகளை நவீனமயமாக்கும் முயற்சியாக, எகிப்து நாடு தனது ‘விசா-ஆன்-அரைவல்’ (Visa-on-Arrival) அமைப்பில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல், கெய்ரோ சர்வதேச விமான நிலையத்தில் பழைய காகித விசா ஸ்டிக்கர்களுக்குப் பதிலாக டிஜிட்டல் ‘க்யூ.ஆர் கோடு’ (Visa QR Code) முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சீனாவில் இப்படி ஒரு நகரமா? 500 வருஷமா பூட்டியே இருக்கு… தப்பித் தவறி உள்ள போனா சாவடிச்சிருவாங்க

புதிய ‘க்யூ.ஆர் கோடு’ முறை எப்படிச் செயல்படும்?

இனி எல்லைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் உங்கள் பாஸ்போர்ட்டுடன் இந்த டிஜிட்டல் க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து நாட்டிற்குள் அனுமதிப்பார்கள். 

பெறும் வழிகள்

  • எகிப்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் விசா இணையதளம்
  • அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் 
  • கெய்ரோ விமான நிலையத்தின் வருகை மண்டபத்தில் உள்ள சுயமாக இயங்கும் இயந்திரங்கள் 

காலக்கெடு

இந்த க்யூ.ஆர் கோடைப் புறப்படும் முன்போ, விமானப் பயணத்தின் போதோ அல்லது தரையிறங்கிய பிறகோ பெற்றுக்கொள்ளலாம். உருவாக்கப்பட்டதில் இருந்து 48 மணி நேரம் மட்டுமே இது செல்லுபடி ஆகும். இதன் மொத்தக் கட்டணம் 36 டாலர் ஆகும்.  

இந்தியப் பயணிகளுக்கு என்ன மாற்றம்?

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு எகிப்தில் நேரடியாக ‘விசா-ஆன்-அரைவல்’ வசதி கிடையாது.  அமெரிக்கா, பிரிட்டன் அல்லது ஷெங்கன் நாடுகளின் செல்லுபடியாகும் விசாவை ஏற்கனவே பயன்படுத்தி இருக்கும் இந்தியர்கள், வளைகுடா நாடுகளின் குடியிருப்பு அனுமதி வைத்துள்ள இந்தியர்கள் மட்டுமே இந்த க்யூ.ஆர் கோடு முறையைப் பயன்படுத்தி விசா-ஆன்-அரைவல் வசதியை பெற முடியும்.

இந்தத் தகுதிகள் இல்லாத இந்தியப் பயணிகள், வழக்கம்போல் பயணத்திற்கு முன்பே ஆன்லைன் அல்லது தூதரகம் மூலமாகவே விசா பெற வேண்டும். முதற்கட்டமாக கெய்ரோ விமான நிலையத்தில் சோதனை அடிப்படையில் தொடங்கும் இத்திட்டம், படிப்படியாக எகிப்தின் பிற சர்வதேச விமான நிலையங்களுக்கும் விரிவாக்கப்படும் என எகிப்து சுற்றுலா மற்றும் தொல்பொருள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. சோதனைக் காலத்தில் பழைய காகித ஸ்டிக்கர் முறையும், புதிய க்யூ.ஆர் கோடு முறையும் ஒரே நேரத்தில் நடைமுறையில் இருக்கும்.  

Source link