கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என பயம்: முதல்வர் விஜய் மீது உதயநிதி பாய்ச்சல்

சென்னை: கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், மேகதாது விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை; விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை என, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விமர்சித்துள்ளார்.

அவரது அறிக்கை:

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட, தமிழகத்தின் அனுமதி கர்நாடகாவுக்கு தேவை இல்லை என்ற மத்திய இணை அமைச்சரின் பதில், காவிரி விவகாரத்தில், தமிழக உரிமையை கேள்விக்குறியாக்கி உள்ளது.

டில்லி எஜமானர்களை பகைத்து கொள்ளாமலும், ஆட்சிக் கட்டிலை காப்பாற்ற காங்கிரசுக்கு எதிராக பேசாமலும், தமிழகத்தின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதல்வர் விஜய். இந்த பிரச்னையில், தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று, மத்திய அரசிடம் மேகாது அணைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என, சட்டசபையில் பேசி இருந்தேன்.

கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், ‘சோபா மாடல்’ முதல்வர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை; விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை.

இனியும் காலம் தாழ்த்தினால், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும். எனவே, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க, முதல்வர் விஜய் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு உதயநிதி கூறியுள்ளார்.

Source link