10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுக்கு மத்திய அரசு அனுமதி..!!

இந்திய ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான ‘பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட்’ (BRBNMPL), பாலிமர் ரூபாய் நோட்டு திட்டத்திற்காக , ஜூலை 17 அன்று 3.4 கோடி பாலிமர் தாள்களைக் கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை வெளியிட்டிருந்தது. இந்தியாவில் ​பிளாஸ்டிக் நோட்டுகளைச் சோதனை செய்வது முதல் முறையல்ல.

2009 ஆண்டு மத்தியில் ₹10 பிளாஸ்டிக் நோட்டுகளை கொச்சி, மைசூரு, சிம்லா, ஜெய்ப்பூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய வெவ்வேறு தட்பவெப்பநிலை கொண்ட நகரங்களில் புழக்கத்தில் விட்டு சோதனை செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டிருந்தது. ஆயினும் ஒரு சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது.

பிளாஸ்டிக் நோட்டுகளை உலகில் முதல் முறையாக, ​ஆஸ்திரேலியா 1988ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. தற்போது உலகின் 50-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தப் பிளாஸ்டிக் நோட்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். விரைவில் இந்தியாவும் இந்த நவீன முறைக்கு மாற உள்ளது.

Source link