தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள கடைசி படமான ஜன நாயகன் படத்தை மாற்றுத்திறனாளிகள் மற்றும் தூய்மை பணியளார்களுடன் அமைச்சர் ஸ்ரீநாத் பார்த்துள்ளார். இது குறித்து அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் விஜய். கடந்த 2024-ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், 2026- சட்டசபை தேர்தலில் தனி பெரும் கட்சியாக வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றுள்ளார். தனது அரசியல் கட்சியின் தொடங்க விழாவில், இனிமேல் தான் நடிக்கப்போவதில்லை என்று அறிவித்த விஜய், ஜன நாயகன் தான் தனது கடைசி படம் என்று அறிவித்திருந்தார்.
எச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய், மமிதா பைஜூ, பாபி தியோல், நரேன், கௌதம்மேனன், பூஜா ஹெக்டே, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம், தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் ஆகும். கே.வி.என்.நிவனம் தயாரித்த ஜன நாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஜனவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் பிரச்னை காரணமாக அப்போது வெளியாகவில்லை.
கடந்த 7 மாதங்கள் காத்திருப்புக்கு பின், பல தடைகளை கடந்து கடந்த ஜூலை 23-ந் தேதி ஜன நாயகன் திரைப்பம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலில் குறை வைக்காத ஜன நாயகன், விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளில், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் படத்தை பார்த்து தசித்தனர். விஜயின் கடைசி படம் என்பதால், சில அமைச்சர்கள் தியேட்டரில் கண்ணீருடன் இருந்த வீடியோக்கள் கூட வெளியானது,
இதனிடையே அமைச்சர் ஸ்ரீநாத், தூய்மை பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன் இணைந்து ஜன நாயகன் படத்தை பார்த்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நாங்கள் இப்போது ராஹினி, ரோஹினி தியேட்டரில் இருக்கிறோம். தூய்மை பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இங்கு ஜன நாயகன் திரைப்படம் சிறப்புக்காட்சி திரையிடப்படுகிறது. அண்ணாநகர் எம்எ.ல்.ஏ, ராம்குமார், பொன்னேரி எம்.எல்.ஏ ரவிக்குமார் ஆகியோர் என்னுடன் இருக்கிறார்கள். இந்த சிறப்புக்காட்சி அமைத்து கொடுத்த அனைவருக்கும் நன்றி, என் செல்லங்களோட எங்கள் தலைவர் படத்தை பார்க்க போகிறோம் என்று கூறியுள்ளார்.
