தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக இருந்து தற்போது தமிழக முதல்வராக மாறியுள்ள விஜய், நடிப்பில் இருந்து விலகி இருந்தாலும் அவரது உறவினர்கள் பலரும் சினிமாவில் நடிகர்களாக இருக்கின்றனர். அந்த வகையில், குழந்தை நட்சத்திரமாக இருந்த நடிகராக மாறியுள்ள ஒருவர் விஜயின் நெருங்கிய உறவினர் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் விஜய். கடந்த 2024-ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், 2026- சட்டசபை தேர்தலில் தனி பெரும் கட்சியாக வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றுள்ளார். தனது அரசியல் கட்சியின் தொடங்க விழாவில், இனிமேல் தான் நடிக்கப்போவதில்லை என்று அறிவித்த விஜய், ஜன நாயகன் தான் தனது கடைசி படம் என்று அறிவித்திருந்தார்.
எச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய், மமிதா பைஜூ, பாபி தியோல், நரேன், கௌதம்மேனன், பூஜா ஹெக்டே, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம், தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் ஆகும். கே.வி.என்.நிவனம் தயாரித்த ஜன நாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஜனவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் பிரச்னை காரணமாக அப்போது வெளியாகவில்லை.
கடந்த 7 மாதங்கள் காத்திருப்புக்கு பின், பல தடைகளை கடந்து கடந்த ஜூலை 23-ந் தேதி ஜன நாயகன் திரைப்பம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இதன் மூலம் விஜய் சினிமாவுக்கு குடு்பை சொல்லிவிட்ட நிலையில், அவரது உறவினராக விராஜ், விக்ரந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். குறிப்பாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சென்னை 28 படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்து அசத்தியவர் தான் விராஜ்.
2000-ம் ஆண்டு சூர்யா, ரகுவரன் நடிப்பில் வெளியான உயிரிலே கலந்தது படத்தில், இளம் ரகுராம் (ரகுவரன்) கேரக்டரில் நடித்தவர் தான் விராஜ். அதன்பிறகு, உன்னை நினைத்து படத்தில் லைலாவின் தம்பி, தித்திக்குதே படத்தில் இளம் ஜீவா, உன்னை சரணடைந்தேன் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த விராஜ், அந்நியன் படத்தில், விக்ரமின் சிறுவயது கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார். அதன்பிறகு 2007-ம் ஆண்டு வெளியான சென்னை 28 படத்தில் கிரிக்கெட் வீரர் கேரக்ரில் நடித்திருந்தார். இவர் வேறு யாரும் இல்லை விஜய் தாய்மாமா மகன் தான்.
விஜய் அம்மா ஷோபா சந்திரசேகரின் தம்பி தான் எஸ்.என்.சுரேந்தர். பாடகர், டப்பிங் கலைஞராக இவர், விஜயின் ஆரம்ப கட்ட படங்களில் அவருக்காக பாடல்கள் பாடியுள்ளார். சென்னை 28 படத்தில் ஜெய்க்கு அப்பா கேரக்டரில் நடித்துள்ள இவர், மோகன் நடிப்பில் வெளியான பல படங்களுக்கு அவருக்காக குரல் கொடுத்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் நடித்த ஆரம்ப கட்ட படங்களுக்கு அவருக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார். விராஜ் அடுத்து சென்னை 28 2ம் பாகம், மிஷன் சாப்டர் 1 ஆகிய படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
