IND vs SL Test – இந்திய உத்தேச 11 அணி: பேட்டிங், பந்துவீச்சு எப்படி இருக்கு? வாஷிங்டனுக்கு மாற்று யார்? – india team predicted 11 for 1st test vs srilanka team

இலங்கை செல்லும் இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இதில், முதல் போட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ஷுப்மன் கில் தலைமையில் 15 பேர் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய டெஸ்ட் அணி பட்டியல்: ஷுப்மன் கில் (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஷ்வால், கே.எல்.ராகுல் (துணைக் கேப்டன்), ரிஷப் பந்த், தேவ்தத் படிக்கல், சாய் சுதர்ஷன், துரூவ் ஜோரல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மனவ் சுதர், ஜஸ்பரீத் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்நூர் பிரார், சரன்ஸ் ஜெய்ண்.

இந்நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி துவங்கவுள்ள, இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் பிளேயிங் 11 எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

பேட்டர் இடங்கள்: ஓபனர்கள் இடங்களில் யாஷஸ்வி ஜெய்ஷ்வால், கே.எல்.ராகுல் ஆகியோர் இருப்பார்கள். அடுத்து, மூன்றாவது இடம் சாய் சுதர்ஷனுக்கு வழங்கப்படும். சாய் சுதர்ஷன், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பெரிய ஸ்கோரை அடிக்கவில்லை என்றால், அடுத்து இவருக்கு வாய்ப்பு கிடைக்காது எனக் கருதப்படுகிறது. இதனால், இலங்கை டெஸ்ட் தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இதனைத் தொடர்நுத, 4ஆவது இடம், கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு வழங்கப்படும். தொடர்ந்து, விக்கெட் கீப்பர் பேட்டராக ரிஷப் பந்த் இருப்பார். அடுத்து, துரூவ் ஜோரலுக்கு இடம் வழங்கப்படும்.

இப்படி, முதல் 6 இடங்களிலும் முழுநேர பேட்டர்கள்தான் இருப்பார்கள்.

இதனைத் தொடர்ந்து, ஆல்ரவுண்டர்கள் இடங்களில் ரவீந்திர ஜடேஜா, மனவ் சுதார் ஆகியோரின் பெயர்கள் இருக்கும். இதில், இருவருமே திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஜடேஜாவை ஓரங்கட்டும் முடிவில் கம்பீர் இருக்கிறார். இதனால், இலங்கை டெஸ்ட் தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியாக வேண்டும். வாஷிங்டன் சுந்தர் இடத்தை பிடிக்க வேண்டும் என்றால், மனவ் சுதார், இலங்கைக்கு எதிராக பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

ஜஸ

பௌலர்கள் இடம்: முதல் டெஸ்ட் ஜ்ஜகபமபோட்டியில், மூன்று முழுநேர பௌலர்கள் இடம்பெற உள்ளனர். குல்தீப் யாதவுடன் சேர்த்து, ஜஸ்பரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் முழுநேர பௌலர்களாக இருப்பார்கள்.

இந்திய உத்தேச 11 அணி : யாஷஸ்வி ஜெய்ஷ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், துரூவ் ஜோரல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மனவ் சுதார், ஜஸ்பரீத் பும்ரா, முகமது ஷமி.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை கல்லே மைதானத்தில் நடைபெறும். இதனைத் தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை, கொழும்பு மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற, இந்திய அணிக்கு இத்தொடர் மிகமுக்கியமான தொடராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link