நவ கிரகங்களில் ஆற்றல், தைரியம், வேகத்தை தரக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் ஆகஸ்ட் 2ம் தேதி மிதுன ராசியில் நுழைய உள்ளார். செப்டம்பர் 18ஆம் தேதி வரை அங்கு சஞ்சரிக்கும். செவ்வாய், மேஷம், மிதுனம் உள்ளிட்ட ஐந்து ராசிகளுக்கு அற்புதமான யோக பலனை தர உள்ளார். எந்த ராசியை சேர்ந்தவர்கள் செவ்வாய் பெயர்ச்சியால் நற்பலனை அடைவார்கள் என தெரிந்து கொள்வோம்.
செவ்வாய் பகவான் ஆகஸ்ட் 2ம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நிலையில் அவர் செப்டம்பர் 18ம் தேதி வரை அங்கு சஞ்சரிப்பார். பகை ஸ்தானமாக இருந்த போதிலும், செவ்வாயின் அமைப்பு சிலர் ராசிகளுக்கு வாழ்க்கையில் வேகத்தையும், புதிய ஆற்றலையும் தருவார். வேலைகளை சிறப்பாக நிறைவேற்றும் வல்லமை, புதிதாக வேறு, மனை என சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகளை தருவார். மேலும் தொழிலை முன்னேற்ற நிலைக்கு கொண்டு செல்ல வாய்ப்புகள் உண்டு. செவ்வாய் பெயர்ச்சியால் பயனடையக்கூடிய ராசிகள் எவை என்பதைத் தெரிந்துகொள்வோம்.
மேஷ ராசி
செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியானது மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் ராசி அதிபதி தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது, உங்கள் குடும்பம் மற்றும் பணியிடத்தில் கடினமான சூழலை கூட சமாளிக்கும் மன தைரியத்தை தருவார். இந்த காலத்தில் ஊடகம் மற்றும் எழுத்து துறையில் உள்ளவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் வேலை தொடர்பான சில பயணங்கள் அதிர்ஷ்டகரமானதாக அமையும். உங்களுடைய இலையை உடன் பிறப்புகளுடன் நேரம் செலவிடும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.
பரிகாரம்:
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் தவறாமல் அனுமன் சாலிசா பாராயணம் செய்யவும்.
மிதுன ராசி
மிதுன ராசி அன்பர்களுக்கு செவ்வாய் உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் மனதளவிலும் உடலளவிலும் ஆற்றலுடன் இருப்பதாக உணர்வீர்கள். இந்த காலத்தில் உங்களுடைய தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் கருத்துக்கள் மற்றும் பேச்சை வெளிப்படுத்தும் போது நிதானத்தை கடைபிடிக்கவும்.
இந்த காலத்தில் வேலை தொடர்பாக தலைமை பண்பு சிறப்பாக இருக்கும். அரசியலில் இருப்பவர்கள் வலுவான தலைவராக வளர வாய்ப்பு உண்டு. இருப்பினும் கோபம் மற்றும் அகங்காரத்தை தவிர்க்க வேண்டியது அவசியம். உடல் நலனில் சிறப்பு கவனம் செலுத்தவும். சிலருக்கு தூக்கம் இன்மை அல்லது தலைவலி போன்ற பிரச்சனைகள் சந்திக்க நேரிடும்.
சிம்ம ராசி
சிம்ம ராசி அன்பர்களுக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாயின் பெயர்ச்சி பலவிதத்தில் நற்பலன்களை தரக்கூடியதாக இருக்கும். குறிப்பாக உங்களுடைய சமூக தொடர்புகள் அதிகரிக்கும். குறிப்பிடத்தக்க நிதி ஆதாயம் நீங்கள் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் சக ஊழியர்களிடமிருந்து முழுமையான அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதிலும், தொழில் வாழ்க்கையில் வெற்றி கிடைக்க வாய்ப்புகள் உண்டு.
பரிகாரம்:
குறைந்தது 7 செவ்வாய்க்கிழமைகளில் அனுமனுக்குத் அர்ச்சனை செய்யவும்.
கன்னி ராசி
கன்னி ராசி அன்பர்களுக்கு செவ்வாயின் கர்ம ஸ்தான சஞ்சாரம் தொழில் ரீதியானம் முன்னேற்றத்தை அடைய வாய்ப்புகள் உண்டு. தொழில் ரீதியான செயல்பாடு முன்னேற்றத்தை தரும். இந்த காலத்தில் உங்களுடைய நிதி நிலை மேம்படும். நீங்கள் செய்யக்கூடிய வேலை அல்லது தொழிலில் திட்டங்களை சரியாக செயல்படுத்தினால் வெற்றி அதிகரிக்கும். அதே சமயம் உங்கள் வாழ்க்கையில் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய காலமாக இருக்கும். பல முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும்.
பரிகாரம்: அனுமனுக்கு வெற்றிலை மாலை சமர்ப்பிக்கவும்.
தனுசு ராசி
தனுசு ராசி அன்பர்களுக்கு சமசப்தம ஸ்தானத்தை செவ்வாயின் சஞ்சாரம், பெரிய அளவில் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக நீங்கள் ஏதேனும் தொழில் அல்லது வியாபாரம் செய்தால் அது கூட்டாளிகள் மூலம் நன்மை கிடைக்கும். பணியிடத்தில் சாக ஊழியர்களின் ஆதரவு, உங்கள் வேலைகளை வேகமாக முடிக்க உதவும். குழுவாக சேர்ந்து பயணிப்பது நல்லது. இந்த காலத்தில் உங்கள் வேலை அல்லது தொழில் தொடர்பாக நேரமையான வளர்ச்சியை காண்பீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சற்று பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். தம்பதியிலேயே கருத்து வேறுபாடுகள் அல்லது வாக்குவாதங்கள் ஏற்படலாம். அதனால் பொறுமையாக எதையும் அணுகுவது அவசியம்.
பரிகாரம்: அனுமனுக்குச் செந்தூரம் சமர்ப்பிக்கவும்.
