தாளவாடியில் காட்டு யானைகள் அட்டகாசம்- விவசாயிகள் அச்சம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. தாளவாடி, ஆசனூர், ஜீரகள்ளி தலைமலை,கேர்மாளம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் வசிக்கும் யானைகள் தினசரி உணவு மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் நுழைவதும் விவசாய பயிர்களை சேதம் செய்து வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்தநிலையில் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட அருளவாடி கிராமத்தில் துரைசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்துக்குள் 5-க்கும் மேற்பட்ட யானைகள் புகுந்தது.இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது துரைசாமிக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை யானைக் கூட்டம் காலால் மிதித்து சேதம் செய்தது. அதன் பிறகு விவசாய பயிர்களையும் சேதம் செய்தது.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பல மணி நேரம் போராடி அந்த யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். யானைகள் விவசாய நிலங்களில் நுழைவதைத் தடுக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source link