நமது நிருபர்பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுவினர் தங்களது அலைபேசியில் தேர்தல்

நமது நிருபர்

பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுவினர் தங்களது அலைபேசியில் தேர்தல் கமிஷனின் ஜி. விஜில், இ.எஸ்.எம்.எஸ். ( Election Seizure Management System ) செயலிகளை பதிவேற்றம் செய்து பொதுமக்கள் புகார்களை 100 நிமிடங்களில் தீர்வு காண தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சட்டசபை தேர்தல் ஏப். 23 ல் நடைபெறுகிறது. தேர்தல் – தேதி அறிவிக்கப்பட்டவுடன் பணியை துவங்க ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 3 பறக்கும் படை, 3 நிலை கண்காணிப்பு குழு, 2 வீடியோ கண்காணிப்பு குழு நியமனம் செய்துள்ளனர். இக்குழுவில் நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகள் தங்கள் அலைபேசியில் ஜி. விஜில் மற்றும் இ.எஸ்.எம்.எஸ். செயலிகளை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

* பொதுமக்கள் புகார் செய்ய ஜி.விஜில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

* ஜி.விஜில் மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்களை 100 நிமிடங்களில் தீர்வு காண வேண்டும். முதலில் 30 நிமிடங்களில் அந்த புகார் மீது நடவடிக்கையை தொடங்கியிருக்க வேண்டும்.

* அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஜி.விஜில் செயலி மாறுபட்டதாக இருக்கும். அதே போல் இ.எஸ். எம். எஸ். செயலியில் பணம், பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யும் போது, கருவூலத்தில் செலுத்துவதற்கு முன்பே, போட்டோவுடன் கூடிய விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

* பணம், பரிசு பொருள்கள் பறிமுதல் செய்தால், பறிமுதல் செய்ததில் இருந்து 24 மணி நேரத்திற்குள் பதிவேற்றம் செய்யலாம்.

* தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது என்றனர்.

Source link