இது விளையாட்டு அல்ல, அதற்கு நேரம் வரும்: 2011-ல் அரசியல் குறித்து பேசிய விஜய் 2026ல் சாதித்தது எப்படி?

முன்னணி நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய், தன்னை விமர்சித்தவர்களுக்கும், தனது அரசியல் பயணத்தை குறைத்து மதிப்பிட்டவர்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாற்றுச் சாதனை படைத்தார். அவரது தமிழக வெற்றி கழகம் (TVK), தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியைப் பிடித்தது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 

விஜயின் இந்த வெற்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏனெனில், பெரும்பாலான எக்சிட் போல்களும் அரசியல் விமர்சகர்களும், தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் குறைந்த அளவிலான தாக்கத்தையே ஏற்படுத்தும் என்று கணித்திருந்தனர்.

வதந்தியில் தொடங்கி, கட்சி தொடங்கிய விஜய்

2000-களின் இறுதிப் பகுதியிலிருந்தே விஜய் அரசியலுக்கு வருவார் என்ற பேச்சு பரவலாக இருந்தாலும், அவர் அதிகாரப்பூர்வமாக அரசியலில் களமிறங்கியது 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில்தான். அப்போது தமிழக வெற்றி கழகத்தைத் தொடங்கிய அவர், தனது 69-வது படத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்க முற்றுப்புள்ளி வைத்து, அரசியலில் முழு கவனம் செலுத்தப் போவதாக அறிவித்தார். அந்த 69-வது படம் பின்னர் ‘ஜன நாயகன்’ என்ற பெயரில் உருவாகி, ஏழு மாதங்களுக்கும் மேலாக தணிக்கை தொடர்பான சர்ச்சையில் சிக்கிய பிறகு, ஜூலை 23 அன்று திரையரங்குகளில் வெளியானது.

அடித்தளத்திலிருந்து த.வெ.க-வை கட்டியெழுப்பிய விஜய்

தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக உள்ள விஜயின் அரசியல் பயணம் சுவாரஸ்யமான திருப்பங்களைக் கொண்டது. அவரது தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர், ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் (TVMI)’ என்ற அரசியல் அமைப்பை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தபோது, தனது பெற்றோர் உட்பட 11 பேருக்கு எதிராக விஜய் வழக்குத் தொடர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட அந்த சர்ச்சையின்போது, அந்த அமைப்புடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று விஜய் வெளிப்படையாக அறிவித்தார். ஆனால், நான்கு ஆண்டுகள் கழித்து தமிழக வெற்றி கழகத்தைத் தொடங்கியதன் மூலம், தனது அரசியல் லட்சியத்தை அவர் உறுதிப்படுத்தினார்.

‘சரியான நேரத்தில் அரசியலுக்கு வருவேன்’ – 2011-லேயே கூறிய விஜய்

2011-ஆம் ஆண்டு அளித்த ஒரு பேட்டியில், சரியான நேரம் வந்தால் அரசியலுக்கு வருவேன் என்று விஜய் கூறியிருந்தார். மேலும், தனது ரசிகர் பட்டாளத்தை வலுப்படுத்தி வருவதும் அரசியல் நோக்கத்தின் ஒரு பகுதிதான் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அப்போது அவரிடம், “அரசியலில் சேரும் எண்ணம் இருக்கிறதா? இருந்தால் எந்தக் கட்சியில் சேர்வீர்கள்?” என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த விஜய், “இப்போது என் முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது. அடுத்ததாக எந்தப் படத்தில் நடிக்க வேண்டும், எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதில்தான் என் கவனம் உள்ளது. நான் நடிகராக வேண்டும் என்பதுதான் என் கனவு. ஆனால் மக்கள் என்னை இவ்வளவு பெரிய இடத்திற்கு கொண்டு செல்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கையில் காலம்தான் மிக முக்கியமானது.”

அதேபோல், ஒரு நாள் நான் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைவேன். அதற்கு சரியான காலமும், சூழலும், இடமும் அமைய வேண்டும். அந்த நேரம் வந்தால் நிச்சயமாக அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வேன். தமிழக மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உறுதி எனக்கு இருக்கிறது. ஆனால், இப்போது என்ன செய்யப் போகிறேன் என்று கேட்டால் அதற்கு என்னிடம் பதில் இல்லை.
அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால் இது அதற்கான சரியான நேரம் அல்ல. என்னை இவ்வளவு உயரத்திற்கு கொண்டு வந்த காலமே, அதற்கான சரியான இடத்திற்கும் அழைத்துச் செல்லும். அந்த வாய்ப்பு வர இன்னும் நேரம் இருக்கிறது. தற்போது அந்த நேரம் இல்லை.” என்று கூறினார்.

ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய முயற்சி

அரசியலுக்குள் நுழைவதற்கான அடித்தளமாக தனது ரசிகர் வட்டத்தை வலுப்படுத்தி வருவதாகவும் விஜய் அப்போது தெரிவித்தார். “நான் அந்த அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். இது விளையாட்டல்ல. யாராவது சொல்கிறார்கள் என்பதற்காகவோ, எழுதுகிறார்கள் என்பதற்காகவோ அரசியலுக்கு வர முடியாது. தற்போது என் முழு கவனமும் ரசிகர் பட்டாளத்தை வலுப்படுத்துவதில்தான் உள்ளது. அதற்காக தொடர்ந்து உழைத்து வருகிறேன். ஒருகாலத்தில் ரசிகர் மன்றமாக இருந்த அமைப்பு, இன்று மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. அதை இன்னும் வலிமைப்படுத்தும் பணியில்தான் நான் இருக்கிறேன்.” என்று விஜய் கூறியிருந்தார்.

Source link