கும்பகோணம்: கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம், நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் 25.1 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து வங்கி கூறியுள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் 2,228 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், நிகர லாபம் 383 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தின் 306 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில் இது 25.10 சதவீத வளர்ச்சியாகும்.
வங்கியின் நிகர வட்டி வருவாய், 625 கோடி ரூபாயிலிருந்து 31 சதவீதம் உயர்ந்து 820 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நிகர வட்டி வரம்பு 3.54 ச தவீதத்தில் இருந்து 3.78 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும், செயல்பாட்டு லாபம், கடந்த ஆண்டு இருந்த 451 கோடி ரூபாயில் இருந்து 28.80 சதவீதம் உயர்ந்து 581 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. மொத்த வாராக்கடன், மார்ச் காலாண்டின் 1.91 சதவீதத்தில் இருந்து 1.73 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 0.68 சதவீதத்தில் இருந்து 0.61 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இது தவிர, ஏப்., – ஜூன் காலாண்டில் வங்கியின் கடன் வ ளர்ச்சி 25 சதவீதமாக பதிவாகியுள்ளது. இவ்வாறு கூறியுள்ளது.
சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக கடந்த மே 1 முதல் விஜய் ஆனந்த் பொறுப்பேற்ற பின், வங்கியின் முதல் நிதிநிலை முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளன.
சி ட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக கடந்த மே 1 முதல் விஜய் ஆனந்த் பொறுப்பேற்ற பி ன், வங்கியின் முதல் நிதிநிலை முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளன.
