கட்டுமான பொருட்கள் கொண்டுசெல்ல தமிழக அரசு தளர்வு அளிக்க வேண்டும்: கேரள முதல்வர் கோரிக்கை

சென்னை: தமிழகத்​தில் இருந்து கேரளா, ஆந்​திரா உட்பட பல்​வேறு மாநிலங்​களுக்கு கற்​கள், ஜல்​லி, எம்​சாண்ட் உள்​ளிட்ட கட்டுமானப் பொருட்​கள் அதி​கள​வில் கொண்டு செல்​லப்​பட்​டன.

இந்​நிலை தொடர்ந்​தால் தமிழகத்​தில் கனிம வளங்​கள் பற்​றாக்​குறை ஏற்​பட்​டு, அவற்​றின் விலை உயரும். மேலும், கனிம வளங்​கள் தொடர்ந்து தோண்டி எடுக்​கப்​படு​வ​தால் சுற்​றுச்​சூழலும் கடுமை​யாகப் பாதிப்​படை​யும் என்று சமூக ஆர்​வலர்​கள் எச்​சரித்து வந்​தனர்.

இதையடுத்து தமிழகத்​தில் இருந்து பிற மாநிலங்​களுக்கு கனிமங்​களை கொண்டு செல்ல 3 மாதங்​களுக்கு தற்​காலிக தடை விதித்து தமிழக அரசு சமீபத்​தில் உத்​தர​விட்​டது. இந்​நிலை​யில், இந்​தத் தடை​யில் தளர்வு வழங்​கு​மாறு தமிழக அரசுக்கு கேரள முதல்​வர் வி.டி.சதீஷன் கோரிக்கை விடுத்​துள்​ளார்.

இதுகுறித்து முதல்​வர் விஜய்க்கு அவர் எழு​திய கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் இருந்து ஜல்​லிக் கற்​கள் உட்பட கட்​டு​மானப் பொருட்​களை வெளி மாநிலங்​களுக்கு கொண்டு செல்ல கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்ட தகவலை அறிந்​தேன்.

இந்த நடவடிக்​கை​யால் திருநெல்​வேலி, தென்​காசி, கன்​னி​யாகுமரி ஆகிய மாவட்​டங்​களில் இருந்து கேரளா​வுக்கு கட்​டு​மானக் கற்​கள் வரு​வது பெரு​மளவு பாதிக்​கப்​பட்​டுள்​ளது. கேரளா​வில் நடை​பெறும் தேசிய நெடுஞ்​சாலைத் திட்​டங்​கள், தமிழகத்​தில் இருந்து கொண்டு வரப்​படும் கற்​களை நம்​பியே இருக்​கின்​றன.

எனவே, தற்​போதைய தடை​யால் கேரளா​வில் நடை​பெற்​று​வரும் பல தேசிய நெடுஞ்​சாலைத் திட்​டங்​களின் கட்​டு​மானப் பணி​கள் பாதிக்​கப்​பட்​டு, அவை தாமதமடை​யும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது.

இந்​தத் திட்​டங்​கள் கேரளா​வுக்கு மட்​டுமின்​றி, ஒட்​டுமொத்த தென் மண்​டலத்​தின் பொருளா​தார வளர்ச்​சி, பிராந்​திய இணைப்​பு, சரக்கு போக்​கு​வரத்து மற்​றும் சுற்​றுலா மேம்​பாட்​டுக்​கும் முக்​கிய​மானவை.

குறிப்​பாக, விழிஞ்​சம் சர்​வ​தேச துறை​முகத்​தை​யும், வல்​லார்​பாடம் சர்​வ​தேச கண்​டெய்​னர் முனை​யத்​தை​யும் இணைக்​கும் தடையற்ற போக்​கு​வரத்​தின் மூலம் தென்​னிந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்​சி​யும் போட்​டித்​தன்​மை​யும் அதி​கரிக்​கும்.

இயற்கை வளங்​களை நிலை​யாகப் பாது​காக்​கும் தமிழக அரசின் கொள்கை நோக்​கங்​களை கேரளா பாராட்​டு​கிறது. அதே​நேரம், தேசிய முக்​கி​யத்​து​வம் வாய்ந்த உள்​கட்​டமைப்​புத் திட்​டங்​களின் நியாய​மான தேவையைக் கருத்​தில்​கொண்டு ஒருசமநிலை​யான அணுகு​முறையை உரு​வாக்​கி​னால், உங்​கள் கொள்​கை​யிலும் பாதிப்​பும் ஏற்​ப​டா​மல் பார்த்​துக் கொள்​ளலாம்.

எனவே, கேரளா​வில் நடை​பெறும் தேசிய நெடுஞ்​சாலை மற்​றும் முக்​கிய உள்​கட்​டமைப்​புப் பணி​களுக்கு பிரத்​யேக​மாகத் தேவைப்​படும் ஜல்​லிக் கற்​களை மட்​டும் தடை​யின்றி கொண்டு செல்​ல வசதி​யாக, உரிய தளர்வு அல்​லது சிறப்பு நடை​முறையை ஏற்​படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Source link