நியூயார்க்; அமெரிக்காவின் ஓஹியோ மாகாண கவர்னர் பதவிக்கு போட்டியிட உள்ள, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த

நியூயார்க்; அமெரிக்காவின் ஓஹியோ மாகாண கவர்னர் பதவிக்கு போட்டியிட உள்ள, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமிக்கு, 40, மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவர். இளம் வயதிலேயே, தன் முயற்சிகளால் பல தொழில்களை துவங்கி வெற்றி கண்டவர். தீவிர அரசியல் ஆர்வம் உள்ள அவர், குடியரசு கட்சியைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளராக உள்ளார். கடந்த, 2024ல் நடந்த அதிபர் தேர்தலின்போது, குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் களமிறங்கினார். பின்னர் போட்டியில் இருந்து விலகி, டிரம்புக்கு ஆதரவு தெரிவித்தார்.

டிரம்ப் நிர்வாகத்தில், சிறந்த அரசு நிர்வாகத்துக்கான துறை என்ற அமைப்பில் விவேக் ராமசாமி இடம்பெற்றிருந்தார். ஓஹியோ மாகாண கவர்னர் பதவிக்கு விரைவில் நடக்க உள்ள தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், விவேக் ராமசாமி, டாக்டரான அவரது மனைவி அபூர்வா தம்பதிக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு, சாவித்ரி என்று பெயர் சூட்டியுள்ளார்.

இந்த தம்பதிக்கு ஏற்கனவே கார்த்திக்,6, அர்ஜுன்,4, என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். ஹிந்து மதத்தை தீவிரமாக பின்பற்றும் விவேக் ராமசாமி, தன் மூன்று குழந்தைகளுக்கும் ஹிந்து பெயர் வைத்துள்ளதற்காக பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

Source link