பழனி தண்டாயுதபாணி கோவில் நிலமோசடி முறைகேடு வழக்கில் சிபிசிஐடி 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது இந்த திருக்கோவிலில் 1988 ஆம் ஆண்டு பக்தர் ஒருவர் 1.40 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்துள்ளார். இந்த இடமானது தண்டாயுதபாணி சுவாமி அறக்கட்டளையின் கீழ் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த இடம் பக்தர்களுக்கு வாகனம் நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பழனி கோவில் நில மோசடி வழக்கு
இந்த சூழலில் 1. 40 ஏக்கர் நிலத்தின் தற்போதைய மதிப்பு 100 கோடி என்று கூறப்படுகிறது. ஆனால் விதிமுறைகளை மீறி தனி நபருக்கு இரண்டு கோடி ரூபாய் விற்று முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் முருகானந்தம் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பதிவு துறை சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் முருகதாஸ், பாப்பான்குளத்தை சேர்ந்த வெள்ளதுரை மற்றும் சேதுபதி உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
திமுக பாஜக கூட்டணியா?நெருக்கடியில் திமுக? காரணம் இதுதானா?
இதற்கிடையே சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தற்பொழுது பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழக காவல்துறையினர் பழனி முறைகேடு வழக்கை விசாரித்து வந்த நிலையில் தற்போது சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் மகேஷ் பாபு அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.அதன் அடிப்படையில் பழனி கோவில் நில மோசடி குறித்து விசாரணையை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை தீவிர படுத்தியுள்ளனர்.
100 மதிப்புள்ள நிலத்தை 2 விற்பனை செய்த சம்பவம்
இந்த சூழலில் பழனி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் பேரவை உறுப்பினர் வேணுகோபால் சேனாதிபதி பழனி கோவில் முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி கடந்த 24ஆம் தேதி ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.அப்போது தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை உண்மை தன்மை வெளியே வராது.
எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.இந்த மனு நீதிபதிகள் சிவி கார்த்திகேயன் மற்றும் ஆர் சண்முகவேல் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது இந்த மனுவை தனி நீதிபதி அமர்வுக்கு கொண்டு வாருங்கள் என்று கூறினர். இப்போது குறிப்பிட்டு பேசிய திமுக தரப்பு வழக்கறிஞர்கள் இந்த மனு தனி நீதிபதி விசாரணை நடத்த பட்டியலிடப்படவில்லை.
பழனி கோயில் நில முறைகேடு- 3 பேர் கைது
எனவே இரண்டு மனுகளையும் சேர்த்து ஒன்றாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த கோரிக்கையை ஏற்று வரும் ஜூலை 30ஆம் தேதிக்கு இந்த மனு மீதான விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் அமர்வு கூறியது .இதனை தொடர்ந்து இந்த வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது. இந்த நிலையில் தற்பொழுது நிலைமுறை கேடு வழக்கில் திருப்பூரை சேர்ந்த வல்லதுரை திண்டுக்கல் அன்வர் தின் விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Source link
