டோக்கியோ: ஜப்பானின் தெற்குப் பகுதியில் கியூசு தீவில் உள்ள குமாமோட்டோ மாகாணத்தில், நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது.
இதைத் தொடர்ந்து, ஒரு மீட்டர் (3.28 அடி) உயரம் வரை அலைகள் எழக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் குறித்த தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை. மீட்புக்குழுவினர் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
