ஹங்சோ: சீனாவின் ஹங்சோ நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் சோனம் உத்தம் மஸ்கர், ஹிமான்ஷு தில்லான் ஜோடி 441.2 புள்ளிகள் சேர்த்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றது. சீன ஜோடிகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்றன.
