தி.மு.க., மீது மக்கள் கோபம்; வீட்டுக்கு அனுப்ப காத்திருக்கின்றனர்; மத்திய அமைச்சர் எல்.முருகன்

மேட்டுப்பாளையம்: ‘திமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். வீட்டுக்கு அனுப்ப காத்திருக்கின்றனர்’ என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து நிருபர்களிடம் எல்.முருகன் கூறியதாவது: காவல் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு, மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. தமிழகத்தில் கஞ்சா, போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது. விளாத்திகுளம் அருகே, பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.

கொங்கு மண்டலத்தில் முதிய தம்பதியர் குறி வைத்து கொலை, நாங்குநேரியில் குடியிருப்பு பகுதிகளில் கஞ்சா போதை கும்பல் அட்டகாசம் என, கஞ்சா ஆசாமிகளின் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் செல்கிறது. இதனால் மக்கள் அச்சத்திலேயே வாழும் மோசமான நிலை உள்ளது.

தி.மு.க.,வின் ஐந்து ஆண்டுகால ஆட்சியில், குடிநீர் கட்டணம், சொத்துவரி உள்ளிட்டவை உயர்த்தப்பட்டுள்ளதால், மக்கள் கோபத்தில் உள்ளனர். வரும் தேர்தலில், தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்ப அவர்கள் காத்திருக்கின்றனர். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

Source link