காமன்வெல்த் விளையாட்டு போட்டி; இதுவரை இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் வென்று சாதனை

நமது நிருபர்

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், இதுவரை 2 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை வென்றுள்ளது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நடக்கிறது. 10,000 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் முதல் வெள்ளி பதக்கத்தை வென்று குல்வீர் சிங் வரலாறு படைத்தார். பெண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் ஹர்ஜிந்தர் கவுர் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.

இதுவரை இந்தியா இரண்டு தங்கம், ஏழு வெள்ளி, மூன்று வெண்கலம் என 12 பதக்கங்களை வென்றுள்ளது. ஆஸ்திரேலியா தொடர்ந்து முன்னணியில் இருந்தாலும், இந்தியா பதக்கப்பட்டியலில் தற்போது 9 வது இடத்தில் உள்ளது.

 காமன்வெல்த் விளையாட்டு இந்தியா இன்று…

தடகளம்

* குண்டு எறிதல், தஜிந்தர்பால் சிங், சமர்தீப் சிங், மதியம் 3:35 மணி

* 200 மீ., ஓட்டம், அனிமேஷ் குஜுர், மாலை 4:02 மணி

* உயரம் தாண்டுதல், பைனல், முரளி ஸ்ரீசங்கர், லோகேஷ், இரவு 11:54 மணி

* 400 மீ., தடை ஓட்டம், சந்தோஷ் குமார், அதிகாலை 12:03 மணி (ஜூலை 30)

* குண்டு எறிதல், மன்பிரீத்கவுர், அதிகாலை 12:31 மணி (ஜூலை 30)

* பாரா வட்டு எறிதல், சாகர், தேவேந்தர், அதிகாலை 12:55 மணி (ஜூலை 30)

* 100 மீ., பாரா ஓட்டம், பைனல், பாசில், திலிப், அதிகாலை 1:42 மணி (ஜூலை 30)

* ஸ்டீபிள் சேஸ், பைனல், பாருல் சவுத்ரி, அதிகாலை 2:05 மணி (ஜூலை 30)

பளுதுாக்குதல்

* 77 கிலோ, சஞ்சனா, மதியம் 2:30 மணி

குத்துச்சண்டை (காலிறுதி)

* சாக்சி (51 கிலோ), மாலை 4:45 மணி

* அருந்ததி (70 கிலோ) மாலை 5:30 மணி

* சச்சின் (60 கிலோ), மாலை 6:15 மணி

* அன்குஷ் (80 கிலோ), இரவு 7:00 மணி

* நரேந்தர் (90 கிலோ), இரவு 7:30 மணி

* ஜாஸ்மின் (57 கிலோ), இரவு 11:00 மணி

Source link