பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பகுதிகளில் முதலீடு செய்வதில் கவனம் தேவை: சிஎம்டிஏ எச்சரிக்கை

சென்னை: பில்​டர்ஸ் அசோசி​யேஷன் ஆஃப் இந்​தியா (பிஏஐ) தென்னக மையம் சார்​பில், தமிழ்​நாடு ரியல் எஸ்​டேட் ஒழுங்​கு​முறை ஆணை​யத்​தின் (ரெ​ரா), இக்​கால புதுப்​பிப்​பு​கள், விதி திருத்​தங்​கள் மற்​றும் வாடிக்​கை​யாளரின் விருப்​பத்​துக்கு ஏற்பகட்​டிடங்​களை வடிவ​மைக்க உதவும் 3டி பிரின்​டிங் தொழில்​நுட்​பம் குறித்த கருத்​தரங்​கம் அசோசி​யேஷன் மையத் தலை​வர் கே.கோபி​நாதன் தலை​மை​யில் அம்​பத்​தூரில் நேற்று நடை​

பெற்​றது.

இதில் இந்​திய கட்​டுநர் சங்க, தமிழக கிளை​யின் சிஎம்​டிஏ மற்​றும் டிடிசிபி கமிட்டி தலை​வர், பொறி​யாளர் எஸ்​.​ராமபிரபு பேசி​ய​தாவது: கட்​டு​மானப் பணி​களின்​போது ரெரா எண் இல்​லாமல் விளம்​பரம் செய்​தால் திட்ட மதிப்​பின் அடிப்​படை​யில் ரூ.2 லட்​சம் முதல் ரூ.5 லட்​சம் வரை அபராதம் விதிக்​கப்​படலாம். எனவே அதில் திட்​ட​மிடல் அவசி​யம்.

பத்​திரப்​ப​திவு துறை​யில் ஆக.17 முதல் வரு​கை​யில்லா பத்​திரப்​ப​திவு முறை கட்​டாய​மாக்​கப்பட உள்​ளது.

இதன்​மூலம் மனைப் பிரிவு​கள் மற்​றும் அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​களின் முதல் விற்​பனை பதிவு​களுக்கு சார்​ப​தி​வாளர் அலு​வல​கத்​துக்கு நேரில் செல்​லாமல், கட்​டு​மான நிறு​வனங்​களின் அலு​வல​கங்​களி​லேயே பதிவு​களை எளி​தாக செய்​து​கொள்ள முடி​யும்.

பள்ளிக்கரணை ராம்​சார் சதுப்பு நிலப் பகு​தி​யின் ஒரு கி.மீ. எல்​லைக்​குள் 12 கிராமங்​களின் 8,400 ஏக்​கர் நிலம்​ உள்​ளது. கடந்த அக்​டோபர் முதல், இந்த எல்​லைக்​குள் புதிய திட்ட அனு​ம​தி​கள் வழங்​கப்​ப​டாத​தால் 5 லட்​சம் குடும்​பங்​கள், 1.25 லட்​சம் பட்டா நில உரிமையாளர்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

மேலும் தொழில் உரிமங்​களைப் புதுப்​பிக்க ராம்​சார் தடை​யில்லா சான்​றிதழ் கட்​டாய ​மாக்​கப்​பட்​டுள்​ள​தால் முதலீடு​களும் பாதிக்​கப்​படு​கின்​றன. இப்​பிரச்​சினைக்கு சட்​டரீ​தி​யானதீர்வு காண கிரெ​டாய் அமைப்பு உள்​ளிட்ட சில கட்​டு​மான நிறு​வனங்​கள் சென்னை உயர் நீதி​மன்​றத்தை நாடி​யுள்ள நிலை​யில், தீர்ப்பு ஆகஸ்ட் 3-ம் தேதி வெளி​யாக வாய்ப்​புள்​ளது. எனவே, இங்கு புதிய முதலீடு​களை மேற்​கொள்​வது குறித்து கவன​மாக செயல்​படுங்​கள். இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

Source link