2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1720 சரிவு

சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 29) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 155 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால் தமிழகத்தில் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூலை 27) ஆபரண தங்கம் கிராம், 13,370 ரூபாய்க்கும், சவரன், 1,06,960 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 240 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய நிலவரம்

நேற்று (ஜூலை 28), தங்கம் விலை கிராமுக்கு, 155 ரூபாய் குறைந்து, 13,215 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,240 ரூபாய் சரிவடைந்து, 1,05,720 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, ஐந்து ரூபாய் குறைந்து, 235 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.35 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இன்றைய நிலவரம்

இந்நிலையில் இன்று (ஜூலை 29) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 155 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 1720 ரூபாய் சரிந்துள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்

Source link