சென்னை: 'ரஷ்யா துறைமுகத்தில் இருந்து, ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல், சென்னை துறைமுகம்

சென்னை: ‘ரஷ்யா துறைமுகத்தில் இருந்து, ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல், சென்னை துறைமுகம் வந்தடைந்தது. மற்றொரு கப்பல், வரும் 24ல் வந்தடையும்’ என, சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே, போர் நீடித்து வருகிறது. ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை, ஈரான் மூடியுள்ளதால், அந்த வழியாக பெரும்பாலான நாடுகளுக்கு, கப்பலில் கச்சா எண்ணெய் எடுத்து செல்வது பாதிக்கப்பட்டுள்ளது.

இதர நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு வருவதில், மத்திய அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவில் நகோட்கா துறைமுகத்தில் இருந்து, ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல், சென்னை துறைமுகம் வந்தது.

இது குறித்து, சென்னை துறைமுக அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை துறைமுகத்திற்கு, வழக்கமாக மாதந்தோறும் நான்கு கப்பல்களில் கச்சா எண்ணெய் வரும். இவற்றில், 10 லட்சம் டன் கச்சா எண்ணெய் எடுத்து வரப்படும். தற்போதைய நிலவரப்படி, சென்னை துறைமுகத்தில் 6.50 லட்சம் டன் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது.

ரஷ்யாவின் நகோட்கா துறைமுகத்தில் இருந்து, ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல், சென்னை துறைமுகம் வந்தது. அடுத்த கப்பல் வரும் 24ம் தேதி, ஒரு லட்சம் கச்சா எண்ணெய் உடன் சென்னை வருகிறது. இந்த மாதம் இறுதிக்குள், மேலும் இரண்டு கப்பல்கள் அடுத்தடுத்து வரும். சென்னை துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெய் வினியோகத்தில், எந்த தட்டுப்பாடும் ஏற்படவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link