சுஜாதா ஸ்டோரி: ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஜீவனாம்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ரவி மோகன் தனக்கு மாதம் ரூ. 40 லட்சம் கொடுக்க உத்தரவிடச் சொல்லி ஆர்த்தி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. ரூ. 40 லட்சம் அல்ல மாதம் ரூ. 3 லட்சம் கொடுத்தால் போதும். விவாகரத்து தீர்ப்பு வரும் வரை இந்த தொகையை ஆர்த்திக்கு ரவி மோகன் கொடுக்க வேண்டும் என்றது நீதிமன்றம்.
பிள்ளைகள் ஆரவ், அயான் ஆகியோரை ரவி மோகன் சந்திப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஆர்த்தியின் தாயும், தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் இன்ஸ்டாவில் மூன்று ஸ்டோரி போட்டிருக்கிறார். உறவுகள் மூன்றாவது நபரால் நாசமாவது இல்லை. ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்போது மூன்றாவது நபரை அனுமதிக்கும் நபரால் நாசமாகிறது என்பது தான் சுஜாதா விஜயகுமாரின் முதல் ஸ்டோரி ஆகும்.
ரவி மோகன் வாழ்க்கையில் பாடகி கெனிஷா பிரான்சிஸ் வந்ததால் கணவன், மனைவி பிரிந்து விவாகரத்து ஏற்பட்டதாக முன்பு பேசப்பட்டது. ஆனால் தன்னால் ரவி மோகன், ஆர்த்தி பிரிந்து விவாகரத்து வரை செல்லவில்லை என்றார் கெனிஷா. இந்நிலையில் மூன்றாவது நபர் குறித்து ஸ்டோரி போட்டிருக்கிறார் மாமியார் சுஜாதா.
தோல்வி, துரோகம்: நீ ஒரு மனைவியாக தோற்றதால் அவர் உன்னை ஏமாற்றவில்லை. அவர் ஒரு ஆணாக தோற்றதால் தான் துரோகம் செய்தார் என்பதே இரண்டாவது ஸ்டோரி. மனைவி, பிள்ளையை மிதித்துவிட்டு காதலிக்கு ரோசாப்பூ கொடுக்கிறார் கணவர் என்பது மூன்றாவது ஸ்டோரி ஆகும்.
சுஜாதா விஜயகுமார் என்னவோ யார் பெயரையும் குறிப்பிடாமல் ஸ்டோரி போட்டிருந்தாலும் அவர் தன் மகன் போன்று நினைத்த மருமகன் ரவி மோகனை தான் குத்திக் காட்டியிருக்கிறார் என பேசப்படுகிறது. கெனிஷா பிரான்சிஸ் என் தெரபிஸ்ட் என்ற ரவி மோகன், பின்னர் அவரை தன் கம்பானியன் என்றார். ஒரு கட்டத்தில் இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறியதுடன் சென்னையை காலி செய்துவிட்டு சென்றுவிட்டார் கெனிஷா. அவர் உங்களுக்கு வேண்டாம் ரவிணா, உங்களின் நல்ல இமேஜை டேமேஜ் செய்துவிட்டார் என்றார்கள் ரசிகர்கள்.
கோவில் விழா: முன்னதாக கேரளாவில் இருக்கும் மீன்குளத்தி அம்மன் கோவிலில் நடந்த விழாவில் பாட்டு பாடினார் கெனிஷா பிரான்சிஸ். பாடச் செல்லும் முன்பு ரவி மோகனின் காலை தொட்டு அவர் கும்பிட்ட வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியானது. மேலும் மேடையில் ரவி மோகனும், கெனிஷாவும் சேர்ந்து பாடியதுடன் கட்டிப்பிடித்த வீடியோவும் வந்தது.
அதன் பிறகு சமூக வலைதளத்தில் ஆர்த்தியை மோசமாக கமெண்ட் செய்தார் கெனிஷா பிரான்சிஸ் என ஸ்கிரீன்ஷாட்களை சினிமா ரசிகர்கள் ஷேர் செய்தனர். அதை பார்த்த கெனிஷாவோ, தன் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், அது சென்னையில் உள்ள யாரோ ஒருவரால் தான் நடந்தது என்றும் தெரிவித்தார். பின்னர் கடைசியாக ஒரு வீடியோ வெளியிட்டுவிட்டு இன்ஸ்டாகிராமில் இருந்து கிளம்பிச் சென்றார்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
கெனிஷா கிளம்பிய பிறகு செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த ரவி மோகன் மென்டல் ஹெல்த் பற்றி பேசியதுடன், கண் கலங்கினார். அழாதீங்க ரவிணா, எல்லாம் சரியாகிவிடும் என்று ரசிகர்கள் ஆறுதல் கூறினார்கள். பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் மென்டல் ஹெல்த் முக்கியம் என பேசப்பட்டது. தான் பேசியதை பார்த்து பிற ஆண்களும் தங்களின் மனநிலை பற்றி பேச ஆரம்பித்ததை பார்த்து மகிழ்ச்சியாக இருப்பதாக விருது விழாவில் தெரிவித்தார் ரவி.
Source link
