Artha Kendra Yoga Benefits,சூரியன்–சுக்கிரன் இணைவால் உருவாகும் அர்த்தகேந்திர யோகம்: 5 ராசிகளுக்கு நிதி முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் – artha kendra yoga formed by the sun and venus: five zodiac signs that may experience financial growth

ஜூலை 29ஆம் தேதி அன்று சுக்கிரன் மற்றும் சூரியனிடையே உருவாகக்கூடிய மங்களகரமான அர்த்தகேந்திர யோகம் சில குறிப்பிட்ட ராசிகளுக்கு செல்வதை தரக்கூடியதாகவும், உங்களுடைய வேலை மற்றும் பணம் தொடர்பாக அதிர்ஷ்டம் உடன் இருக்கும். உறவுகள் மேம்படும் வாய்ப்புள்ள ராசிகள் எவை என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி யோகங்கள் சில கிரகங்களின் சேர்க்கைகளால் மட்டும் அல்ல, அவை அமைந்துள்ள இடத்தை பொருத்தும் ஏற்படும். அந்த விதத்தில் சூரியன் மற்றும் சக்கிரன் இடையே 45 டிகிரி கோண அமைப்பு காரணமாக உருவாகும் “அர்த்தகேந்திர யோகம்” உறவுகளிடையே இனிமையான சூழலும், கல்வி, கலை தொடரமாக முன்னேற்றமும், மேலே தொழிலில் ஆளுமை திறனும் அதிகரிக்கும். இந்த யோகத்தால் சில ராசிகளின் வாழ்க்கையில் பெரிய அளவில் முன்னேற்றம் மற்றும் மரியாதை காண்பார்கள். எந்தெந்த ராசிகளுக்கு அற்புதம் நடக்கும் என தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசி

மேஷ ராசி பிறந்தவர்களுக்கு, ஐந்தாம் வீடான சிம்ம ராசியில் இருக்கும் சுக்கிரன், நான்காம் வீட்டில் சூரியனும் சஞ்சாரம் செய்கின்றனர். கல்வி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகள் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவார்கள். நீங்கள் எதிர்காலத்தில் நன்மை தரக்கூடிய முதலீடு தொடர்பான விஷயங்களில் அக்கறை காட்டுவீர்கள். போட்டி தேர்வுக்கு தயாராக கூடிய மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். இந்த காலத்தில் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தக்கூடிய நல்ல வாய்ப்புகள் அமையும்.
மேஷ ராசி அன்பர்களுக்கு சுப பலன்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், உங்கள் முயற்சிகளை அதிகரிக்கவும். உணர்ச்சிவசப்பட்டு இந்த முதலிடம் செய்ய வேண்டாம்.
தினமும் சூரியன் மற்றும் சுக்கிர வழிபாடு செய்வது அவசியம்.

கடக ராசி

கடக ராசி நண்பர்களுக்கு சூரியனின் நிலை உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உங்களுடைய ராசிக்கு தனஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுடைய செல்வ வளம் பெருகும். பணவரவு அதிகரிக்கும், உங்களுடைய பேச்சாற்றல் சிறப்பாக இருக்கும் என்பதால் உங்களுடைய குடும்பம் மற்றும் பணியிடத்தில் சூழல் சாதகமானதாக மாறும்.

சிலருக்கு ஊதிய உயர்வு, தொழிலை விரிவாக்குவதற்கான வாய்ப்பு, புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான நல்ல சூழல் என இந்த யோகம் பல விதத்தில் சாதகமானதாக அமையும். குறிப்பாக கடக ராசியினர் மேற்கொள்ளக்கூடிய கடின உழைப்பு மற்றும் உங்களுடைய தகுதியை மேம்படுத்திக் கொள்வது வருங்காலத்தில் நன்மைகளை அதிகப்படுத்தும். உங்கள் நிதி நிலையை கணிசமாக வலுப்படுத்தும்.

சிம்ம ராசி

சிம்ம ராசியினருக்கு, உங்களுடைய லக்னத்திலேயே சுக்கிரன் சஞ்சரிப்பதும், ராசிநாதன் சூரியன் 12ம் ஸ்தானத்தில் இருப்பது, நீண்ட காலமாக செய்து வரும் கடின உழைப்பிற்கான பலனை பெறுவீர்கள். கலைத்துறை, ஊடகத்துறை, ஃபேஷன் டிசைன் உள்ளிட்ட துறையில் உள்ளவர்களுக்கும், கல்வி, அரசியல் மற்றும் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு தங்களுடைய திறமையை நிரூபிக்கவும், நல்ல பெயர் எடுக்கவும் வாய்ப்புகள் உண்டு.
இந்த காலத்தில் உங்களுடைய வேலையில் அதிக கவனம் செலுத்தி செயல்பட்டால் அதற்கான வெற்றியும் அதிகரிக்கும். செல்வாக்கு மிக்க நபர்களின் தொடர்பு அதிகரிக்கும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசி அன்பர்களுக்கு பாக்கிய ஸ்தானத்தில் சூரியனும், கர்ம ஸ்தானத்தில் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வது, பல விதத்தில் அதிர்ஷ்டம் தரக்கூடிய அமைப்பாக இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்கள், அரசியலில் உள்ளவர்களுக்கு, உத்தியோகஸ்தர்களுக்கு இந்த காலம் மிகச் சிறப்பானதாக இருக்கும். மேலும் உங்களுக்கு புதிய பொறுப்பு கிடைப்பதோடு புகழும் அதிகரிக்கும்.
உயர் அதிகாரிகளை நம்பிக்கையை பெறுவீர்கள். உங்கள் வேலை அல்லது தொழில் தொடர்பாக புதிய பாதையில் பயணிப்பீர்கள். ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் மாணவர்கள் சிறப்பாக படிப்பார்கள். இந்த காலத்தில் உங்களுடைய முடிவு எடுக்கும் திறன் மேம்படும்.

மீன ராசி

மீன ராசி நண்பர்களுக்கு சூரியன் புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதும், சுக்கிரன் சத்ரு ஸ்தானத்தில் இருப்பது, உங்களுடைய பணிகளை மேம்படுத்தவும், அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்து முடிக்க மற்றும் திட்டமிடுதல் என சிறப்பாக செயல்படுவீர்கள். உங்களுடைய சுறுசுறுப்பான செயல்பாடு பணிகளை வேகமாக முடிக்க முடியும். நீண்ட காலம் ஆக தடைபட்ட வந்த பொறுப்புக்கள் அல்லது வேலைகளை முடிப்பீர்கள். கடினமான சூழ்நிலை கூட சாதகமாக மாற்றுவீர்கள்.
இந்த காலத்தில் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆக்கப் பூர்வமான சிந்தனை செயல் பட்டு வேலைகளை முடிக்க முடியும். அதே சமயம் சிறிய விஷயங்களை கூட கவனமாக சிந்தித்து செயல்படுவது உன்னுடைய லாபத்தை அதிகரிக்கும்.
தினமும் விஷ்ணு பகவான் பக்தியுடன் வழிபடுவது நன்மை தரும்.

Source link