இளைஞர்களின் கருத்தை முட்டாள்கள்…ராகுல் காந்தி பேச்சால் மக்களவையில் பாஜக எம்பிக்கள் அமளி

மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறை அல்லது வெறுப்பின் வெளிப்பாடு அல்ல. அது நாட்டின் இளைஞர்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கும் ஆழமான வெளிப்பாடு. மாணவர்கள் நடத்திய போராட்டம் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்தது., இளைஞர்கள் தங்களது எதிர்காலம் குறித்து கொண்டுள்ள கவலை மற்றும் எதிர்பார்ப்புகளையே அந்த போராட்டம் வெளிப்படுத்தியது. இந்த மாணவர் போராட்டத்தை எந்த அரசியல் கட்சியும் தவறாக புரிந்துகொள்ளக் கூடாது .

பெருமையுடன் பார்க்க வேண்டும்

ஆளும் பாரதீய ஜனதா கட்சி உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் மாணவர்களின் ஜனநாயகபூர்வமான கருத்து வெளிப்பாட்டை மதிக்க வேண்டும். பா.ஜ.க. தலைவர்கள் தங்களது சொந்த குழந்தைகளிடம் இந்த போராட்டங்கள் குறித்து பேசினால், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் பக்கமே அவர்களது குழந்தைகளின் ஆதரவு இருப்பதை உணர்வார்கள். இந்த போராட்டத்தில் தவறு எதுவும் இல்லை. மாறாக, இந்த நிகழ்வை ஒவ்வொரு இந்தியரும் பெருமையுடன் பார்க்க வேண்டும். இளைஞர்களின் கருத்தை முட்டாள்கள் கேட்பதில்லை” என்றார்

மக்களவை சபாநாயகர்

ராகுலின் இந்த கருத்துக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.. இதையடுத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, விவாதத்தின் பொருளுக்கு தொடர்புடைய விஷயங்களை மட்டும் பேசுமாறு ராகுல் காந்தியிடம் அறிவுறுத்தினார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, தாம் மாணவர் என்றால் யார் என்பதை மட்டுமே விளக்கி வருவதாகவும், யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்றும் கூறினார். எனினும், அவரது விளக்கத்தையும் தொடர்ந்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

Source link