மேலும், சமூக வலைத்தளத்தின் மூலமாக இளைஞர்கள் ஒன்றிணைந்து மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை இது நிரூபித்துள்ளதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சமூக ஊடகத்தின் வலிமையைப் புரிந்து கொண்ட அரசியல் தலைவர்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் பாணியைப் பின்பற்றி மற்றொரு இயக்கமும் கவனம் பெற்று வருகிறது. இன்ஸ்டாகிராமில் இட ஒதுக்​கீட்​டுக்கு எதி​ராக ‘ரிசர்வேஷன் ஹட்டாவோ அந்தோலன்’ என்ற பக்​கம் 55 லட்சத்துக்​கும் அதி​க​மான பின்​தொடர்​வோரை கொண்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளைக் கொண்ட அந்த பக்கத்தைத் தொடங்கியவர் யார்? என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால், இது இந்​திய ராணுவத்​தின் அதி​காரப்​பூர்வ பக்​கத்தை மட்​டுமே பின்​தொடர்கிறது.
இதன் சுய​விவரப் பக்​கத்​தில் பி.ஆர்​.அம்​பேத்​கரின் ‘கற்​பி, ஒன்று சேர் புரட்சி செய்’ என்ற முழக்​கத்​துடன் “அனைத்து சாதி​களும் சமமானவை. இந்த நாடு சிறந்​த​தாக இருக்க வேண்​டும் என்​பதே எனது ஆசை” என்ற இந்​திச் செய்​தி​யும் இடம் பெற்​றுள்​ளது. இன்​ஸ்​டாகி​ராம் பதிவு ஒன்​றில், தங்​களுக்கு எந்​தவொரு அரசி​யல் கட்​சி​யுட​னும் தொடர்​பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்று அரசு ஆணை பிறப்பித்தும் கூட அதனை நிறைவேற்ற முடியவில்லை. அப்படி இருக்கும் போது இட ஒதுக்கீட்டை ஒழித்தால் எப்படி சமமான இந்தியா உருவாகும்? இன்றளவும் பொருளாதார ரீதியாகவும் , கல்வி ரீதியாகப் பின்தங்கியுள்ள பல்வேறு தரப்பு மக்கள் உள்ளனர். இட ஒதுக்கீடு இருந்தும் கூட அவர்களால் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னேற முடியவில்லை. அப்படி இருக்கையில், இட ஒதுக்கீடு இல்லை என்றால், எப்படி அனைத்து மக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கும்.
சில மாதங்களுக்கு முன்பு, நாடாளுமன்றத்தில் எதிர் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாட்டின் மிக முக்கிய அதிகாரம் கொண்ட பணிகளில் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் மட்டும் 90 சதவீதம் பேர் இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு ஏன் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இட ஒத்துக்கீடு இருந்த போதும் நாட்டில் சில குறிப்பிட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கோலோச்சி வருகின்றனர். இந்நிலையில், இட ஒத்துக்கீடு இல்லாமல் போனால், இந்நாட்டில் உள்ள 90 சதவீத மக்கள் கல்வி, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாத மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள் எனக் கூறி வருகின்றனர்.
