சென்னை: தமிழகத்தில் ஜூலை 30, ஆகஸ்ட் 1ம் தேதிகளில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் மிக லேசான மழை பதிவாகி உள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. நீலகிரி, கோவை(மலைப்பகுதிகள்) ஆகிய 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 31, ஆகஸ்ட் 1ல்…
* நீலகிரி,
* தேனி,
* கன்னியாகுமரி
* திருநெல்வேலி (மலைப்பகுதிகள்)
* கோவை(மலைப்பகுதிகள்)
ஆகிய 5 மாவட்டங்களில் ஜூலை 31, ஆகஸ்ட் 1ல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
