”போராடிய மாணவர்களை பாஜக அரசு முட்டாள் எனச் சித்தரிக்கிறது”

நாடாளுமன்ற அவையில், தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா மீதான உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, ”நீட் தேர்விற்கு எதிராக இளைஞர்கள் நடத்திய புரட்சி போராட்டத்தைக் குறிப்பிட்டுப் பேசி இருந்தார். அவர் பேசுகையில், நாடு முழுவதும் போராட்டம் நடத்திய மாணவர்களை நினைத்து ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும். நம் நாட்டின் இளைஞர்கள் கல்விக்காகத் தெருக்களில் இறங்கிப் போராடிய செயலை கண்டு  நான் மிகவும் நம்பிக்கையும், உற்சாகமும் கொள்கிறேன். இத போராட்டத்தை இளைஞர்களின் கோபமாகவோ அல்லது வன்முறையாகவோ பார்க்கக் கூடாது. எதிர்கால தலைமுறையின் எதிர்பார்ப்பின் வெளிப்பாடாகப் பார்க்க வேண்டும்.  

பாஜகவில் உள்ளவர்கள் உட்பட, அனைத்து அரசியல் கட்சிகளும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உணர்ச்சி வெளிப்பாட்டை மதிக்க வேண்டும். பாஜகவில் உள்ளவர்கள் தங்கள் சொந்த குழந்தைகளிடம் கேட்டால் கூட, அவர்களும் இளைஞர்களின் போராட்டத்தை மனப்பூர்வமாக ஆதரிப்பதை அறிய முடியும்.   

அதனால், இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டத்தைக் யாரும் கொச்சைப்படுத்தக் கூடாது. தங்களது எதிர்காலத்தைச் சிந்தித்து மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். அத்தகைய மாணவர்களை பாஜக அரசு முட்டாள் எனச் சித்தரிக்கிறது” என்று பேசினார்.  

Source link