கேரளாவைப் பொறுத்தவரை, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் இடதுசாரிகள் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. பேப்பூர், எலத்தூர் மற்றும் கொல்லம் போன்ற இடதுசாரிகளின் கோட்டைகளைக் கைப்பற்ற காங்கிரஸ் மேற்கொள்ளும் முயற்சிகள் பலிக்காது என்றார்.
மேலும் “கேரளாவில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. அவர்களுக்குச் சற்றே வாக்கு வங்கி உயர்ந்திருக்கலாம், ஆனால் ஒரு தொகுதியில் கூட வெல்லும் அளவுக்கு அவர்களுக்கு வலிமை இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
சபரிமலை விவகாரம் இந்தத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும், மக்கள் வளர்ச்சியின் அடிப்படையிலேயே வாக்களிப்பார்கள் என்றும் அவர் கூறினார். சமீபத்தில் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி 2’ திரைப்படம் குறித்துப் பேசிய அவர், கேரளா கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித மதக்கலவரமும் இன்றி அமைதிப் பூங்காவாகத் திகழ்வதாகவும், இத்தகைய திட்டமிட்டப் பிரச்சாரங்கள் உண்மையை மறைக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
