ஓடும் வாகனத்தில் பாம்பு, மீட்பு, பரபரப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், ஓடும் இருசக்கர வாகனத்தில் மறைந்திருந்த பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

இரு சக்கர வாகனத்தில்…பிஜ்னோர் பகுதியில், ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பெட்ரோல் டேங்கிற்கு கீழே ஒரு பாம்பு சுருண்டு பதுங்கியிருப்பதை கவனித்தார். இதனால் அதிர்ச்சியடைந்தவர், உடனடியாக பாதிவழியிலேயே வண்டியை நிறுத்திவிட்டு பயத்தில் சத்தமிட்டார். பாம்பு இருக்கும் தகவல் தெரிந்து, பரபரப்பான சாலையில் ஏராளமான மக்கள் குவிந்தனர்.

பதறி ஓடிய மக்கள் உடனடியாக, மெக்கானிக் வரவழைக்கப்பட்டார். இரு சக்கர வாகனத்தின் பாகங்களை ஒவ்வொன்றாக கழற்றினால் மட்டுமே பாம்பை வெளியே எடுக்க முடியும். மெக்கானிக் மிகவும் கவனமாக கழற்றத் தொடங்கினார். பைக்கின் பாகங்களைப் பிரித்ததும், உள்ளே இருந்த பாம்பு திடீரென ஆக்ரோஷமாகச் சீறியது.

ஓடும் வாகனத்தில் பாம்பு, மீட்பு, பரபரப்பு அதுமட்டுமின்றி, அங்கிருந்த மக்களையும் நோக்கி திடீரெனப் பாய்ந்தது. இதனால் பயந்துபோய் அங்கிருந்தவர்கள், அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

பாம்பை பிடித்த நபர் அப்போது, வண்டியிலிருந்து வெளியேறி சாலையில் வேகமாக, பாம்பு ஓடியது. அங்கிருந்த ஒரு துணிச்சலான இளைஞர், எந்தவொரு பயமும் இன்றி அந்தப் பாம்பைத் தனது வெறும் கைகளாலேயே லாவகமாகப் பிடித்தார். பின்னர், ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்ட அந்த பாம்பு, அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

Source link