ஒரு நடிகர் தனது ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டத்தை சொந்த செலவில் அளிப்பது, இதுவே வரலாற்றில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் மூலம் அவரது ரசிகர் மன்றத்தினர் 900 பேருக்கு மேல் பயன்பெறுவார்கள்.
தனது ரசிகர்களுடன் கலந்துரையாடிய அல்லு அர்ஜுன் “உங்களின் ஆர்வத்தையும், இளமை ஆற்றலையும் சரியான முறையில் ஆக்கப்பூர்வமான செயல்களில் செயல்படுத்துங்கள். சமூகத்திற்கு பயனுள்ள வகையில் உங்களது பங்களிப்பு இருக்க வேண்டும். என் பெயருக்கு நீங்கள் தூதுவர்கள் என்பதால் சமூக வலைதளங்களில் மற்ற நடிகர்களையோ அவர்களது ரசிகர்களையோ விமர்சிக்க கூடாது , வெறுப்பை பரப்ப வேண்டாம்” என்று அறிவுரை வழங்கினார்.
கடந்த வருடம் புஷ்பா திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி அல்லு அர்ஜுன் ரசிகை ஒருவர் உயிரிழந்தார், அதன் காரணமாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். அந்த ரசிகை குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் இழப்பீடு அளித்தாலும், அதன் பின்னர் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ,ரசிகர்கள் பாதிக்க கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறார். தற்போது அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள, ரசிகர்கள் விபத்து காப்பீடு திட்டம் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.
