5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!! இடி, மின்னலுடன் ஊற்றப்போகும் கனமழை..!! லிஸ்ட்டில் எந்தெந்த ஊர்..? | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமடைந்து வரும் நிலையில், வரும் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஜூலை 29ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோரத் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை (ஜூலை 30) நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய இரண்டு நாட்களில் கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்க வாய்ப்புள்ளது.

ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 4 வரை மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த மாவட்டங்களில் மிதமான மழையும், பிற மாவட்டங்களில் லேசான மழையும் பதிவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!! ஸ்டாலினுக்கு டாட்டா காட்டும் ஓபிஎஸ்..!! தவெகவுடன் சீக்ரெட் டீலிங்..!!

Source link