மெட்ரோ ரயிலில் முதல்வர் விஜய் பயணம்: பணிகள் குறித்து ஆய்வு

சென்னை: சென்னை ஓமந்தூராரில் இருந்து நந்தனம் வரை மெட்ரோவில் பயணம் செய்த முதல்வர் விஜய், மெட்ரோ பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளை முதல்வர் விஜய் ஆய்வு செய்யும் வகையில் ஓமந்தூரார் மெட்ரோ நிலையத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கினார்.நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.மெட்ரோ ரயில் நிறுவனம், ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு கத்திப்பாரா பாலத்தையும் ஆய்வு செய்தார்.

பின்னர், பூந்தமல்லி மெட்ரோ ரயில் பணிகளையும், போரூர் – பூந்தமல்லி இடையேயான ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் பணிகளையும் ஆய்வு செய்தார்.

Source link