அமெரிக்காவின் கண்காணிப்பு வளையத்தில் கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ; காரணம் இதுதான்!

பொகோடா: கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோவுக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவரை முக்கிய குற்றவாளியாக கருதி, அமெரிக்க போதைப் பொருள் தடுப்பு நிர்வாகம் கண்காணித்து வருகிறது.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது. இதற்கு கைமாறாக அவர் கோடிக்கணக்கில் லஞ்சம் பெறுவதாகவும் அமெரிக்கா சந்தேகிக்கிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் போதைப் பொருள் தடுப்பு நிர்வாகம், கொலம்பிய அதிபர் பெட்ரோவை முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளது. அவரை கண்காணிக்கவும் துவங்கியுள்ளது. ஏற்கனவே, பெட்ரோவின் மகன் மற்றும் சகோதரர் மீதும் இதே போல குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஒரு நாட்டின் அதிபரையே சந்தேகப்பட்டு, அவரை ஒரு முக்கிய இலக்காக அமெரிக்க போதைப் பொருள் தடுப்பு நிர்வாகம் அறிவித்துள்ளது மிக அரிதானது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை மறுத்த கொலம்பிய அதிபர் பெட்ரோ, ”இது அமெரிக்காவும், கொலம்பியாவில் உள்ள அரசியல் எதிரிகளும் இணைந்து செய்யும் சதி,” என, குற்றஞ்சாட்டினார்.

Source link