ஜோதிட சாஸ்திரத்தின் படி ராசி என்பது மனிதனுடைய பண்பாக கருதப்படுகிறது. அதனால் தான் 12 ராசிகளும் ஒவ்வொரு தனிப்பட்ட குணநலன்களை கொண்டிருக்கின்றன. அவற்றில் சில குண நலன்கள் அல்லது கோட்பாடுகள் ஒருவருக்கொருவர் ஒத்துப் போக வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக இந்திய கலாச்சார திருமணம் தொடர்பான பேச்சு தொடங்கும் போது, அவர்களுடைய ஜாதக பொருத்தத்தின் அடிப்படையில், திருமணம் செய்து வைக்கப்படுகின்றன. பொதுவாக ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் 12 ராசிகளுக்கான பொருத்தமான ராசிகளை இங்கு தெரிந்து கொள்வோம்.
திருமணம் என்றதும் முதலில் நாம் செய்யக் கூடியது, திருமணம் செய்யப் போகும் நபர்களுடைய ஜாதக பொருத்தம் பார்ப்பதுதான். ஒருவருடைய ஜாதகத்தில் குறிப்பிடப்படும் ராசி மனித பண்பாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ராசியும் குறிப்பிடத்தக்க பண்பையும், கோட்பாடுகளையும் கொண்டிருக்கும். அதனால் இந்திய கலாச்சார திருமணங்கள் இருந்தாலும் 12 ராசிகளின் அடிப்படையில் ஜாதக பொருத்தத்தை பார்த்து தீர்மானிக்கின்றனர். 12 ராசிகளுக்கு திருமணத்திற்கு மிகவும் பொருத்தமான ராசிகள் என்னென்ன என்ற விபரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
மேஷ ராசிக்கான திருமண பொருத்தம்
மேஷம் மற்றும் கும்ப ராசி இடையே திருமண பொருத்தம் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த ராசி நபர்கள் இடையே எண்ணங்கள் மற்றும் புரிதல் நன்றாக இருப்பதால், தங்கள் எண்ணங்கள், உணர்வுகளை பகிர்ந்து கொள்வதால் நல்ல இணையாக இருப்பார்கள்.
மேஷ ராசியை சேர்ந்தவர்கள் உணர்வுபூர்வமான பிணைப்பை கொண்டவர்களாக, கும்ப ராசியை சேர்ந்தவர்கள் பரந்த மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பதால் இவர்களிடையே ஒத்துவரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இலகுவாக இருக்கும்.
ரிஷப ராசிக்கான திருமண பொருத்தம்
ரிஷப ராசி அன்பர்களுக்கு கன்னி, கடக ராசி, மகர ராசி அல்லது விருச்சிக ராசி சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ள ஏற்ற நபர்களாக இருப்பார்கள்.
மேலும் ரிஷப ராசியை சேர்ந்த நபர் மிகவும் பொறுமைசாலியாக இருப்பதால், எந்தவித சூழலையும் நன்கு ஆராய்ந்து நிதானமாக செயல்படுவார். ரிஷப ராசி நபர் மிகவும் வசீகரமான நபராகவும், பிறரை ஈர்க்கக்கூடிய சிறந்த செயல்களை செய்யக்கூடியவராக இருப்பார். அதே சமயம் தன்னுடைய துணை மீது அதிக உரிமையை எடுத்துக் கொள்வார். அவரை பாராட்டும் வரும் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக எடுத்துச் செல்லும்.
மிதுன ராசிக்கான திருமண பொருத்தம்
புதன் பகவான் ஆளக்கூடிய மிதுன ராசி அன்பர்களுக்கு கும்பம் அல்லது துலாம் ராசி சென்றவர்கள் நல்ல துணையாக அமைவார்கள்.
மிதுன ராசி அன்பர்கள் கடின உழைப்பாளிகளாகவும், வாழ்க்கையின் மீதான புரிதல், ஆர்வம் தக்க வைத்துக் கொள்ள, எப்பொழுதும் புதிய விஷயங்களை செய்ய முயற்சி செய்வார்கள்.
இவர்கள் தங்கள் கருத்துக்களை, துணையிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்வது, திருமண வாழ்க்கையில் வெளிப்படை தன்மை உடன் வைத்துக் கொள்ள உதவும்.
மிதுன ராசி ஆண்கள் தங்களுடைய துணை மீது அதிக ஆதிக்கம் செலுத்தக்கூடிய குணம் கொண்டவர்களாக இருப்பார்.
கடக ராசிக்கான திருமண பொருத்தம்
சந்திர பகவான் ஆளக்கூடிய கடக ராசி அன்பர்களே, உங்களுக்கு மீனம் மற்றும் விருச்சிக ராசிகள் நல்ல துணையாக அமைய வாய்ப்புகள் உண்டு.
இவர்களுடன் உங்களுடைய உறவு சிறப்பாக அமையும். மேலும் இவர்களுடன் ஆனால் உறவு ஆத்மாத்ம உணர்வைத் தரக் கூடியதாக இருக்கும். இந்த ராசியை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டால் தனக்காகவே தன்னுடைய துணை பிறந்துள்ளார் என நினைக்கத் தோன்றும்.
சில நேரங்களில் கடக ராசி சேர்ந்தவர்கள் ஆதிக்கம் குணம், அனுதாபம், துணையின் செயலை அதிக கவனிக்க கூடிய நபராக மற்றும் துணிச்சல் மிக்க செயல்கள் விருச்சிக ராசி உடன், கடக ராசி நபரை நன்றாக பொருந்தி போக செய்யும்.
சிம்ம ராசிக்கான திருமண பொருத்தம்
நவகிரக தலைவன் சூரியன் ஆளக்கூடிய சிம்ம ராசி அன்பர்களுக்கு தனுசு, சிம்மம், மேஷம் ஆகிய ராசிகள் பொருத்தமான ராசிகளாக இருப்பார்கள்.
இந்த ராசியை நபருடன் சிம்ம அராசியினர் சேரும் போது, அந்த ஜோடி இடையே சிறப்பான கருத்து பரிமாற்றத்தை செய்து கொள்வார்கள்.
சிம்ம ராசிக்கு தனுசு, மேஷம் நல்ல பொருத்தமாக இருக்கும் என்றாலும், தனுசு ராசியை விட மேஷ ராசி உடன் பொருத்தம் மிகவும் சிறப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.
கன்னி ராசிக்கான திருமண பொருத்தம்
கன்னி ராசி அன்பர்களுக்கு கடகம், விருச்சிகம், ரிஷபம் மற்றும் மகர ராசியை சேர்ந்த நம்பர்கள் சிறப்பான திருமண வாழ்க்கை துணையாக அமைவார்கள்.
இந்த ராசியை நபர்களுடன் உறவு மிகவும் வலுவானதாக இருக்கும் என கருதப்படுகிறது. கன்னி ராசியை சேர்ந்தவர்கள் எந்த விஷயங்களிலும் கூர்மையாக கவனிப்பதும், சூழ்நிலை சரியாக புரிந்து கொள்ளக் கூடிய நபர்கள் என்பதால் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும், சுமூகமாகவும் அமையும்,
துலாம் ராசிக்கான திருமண பொருத்தம்
சுக்கிரன் ஆளக்கூடிய துலாம் ராசி அன்பர்களுக்கு ரிஷபம், தனுசு, மீனம் ஆகிய ராசிகள் திருமண வாழ்க்கையில் சிறந்த துணையாக இருப்பார்கள்
துலாம் ராசிக்கும் மேலே குறிப்பிட்ட ராசிகளுக்கும் இடையே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக்கூடிய சிறப்பான பாக்கியம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இவர்களுடைய திருமண வாழ்க்கையில் ஒரு சாதகமாக இருந்தாலும், இவர்களிடையே மோதல் அவ்வப்போது இருக்கத்தான் செய்யும்.
விருச்சிக ராசிக்கான திருமண பொருத்தம்
செவ்வாய் பகவான் ஆளக்கூடிய விருச்சிக ராசி அன்பர்களுக்கு ரிஷபம், கடகம், மகரம் மற்றும் மீனம் ராசி சேர்ந்தவர்கள் நல்ல வாழ்க்கை துணையாக இருப்பார்கள்.
விருச்சிக சியை சேர்ந்தவர்களிடம் நம்பிக்கை, துணையை சார்ந்திருத்தல் மற்றும் கருணை நிறைந்த உள்ளம், இவர்களுடைய உறவை வலுப்படுத்த உதவும்.
விருச்சிக ராசியை சேர்ந்தவர்களுக்கு பொருத்தமான துணை அமைந்துவிட்டால் அவர்களுடன் மகிழ்ச்சியாக ஒன்றாக வாழ்வதற்கான வழியை அவர்களே கண்டுபிடித்து விடுவார்கள்.
தனுசு ராசிக்கான திருமண பொருத்தம்
தனுஷ் குரு பகவான் ஆளக்கூடிய தனுசு ராசி அன்பர்களுக்கு மேஷம், சிம்மம் மற்றும் தனுசு ஆகிய ராசியை சேர்ந்தவர்கள் நல்ல காதல் துணையாகவும், திருமணத்திற்கான பொருத்தமாகவும் இருப்பார்கள்.
தனுசு ராசி நிறைந்த ராசிகளுடன் திருமண உறவில் இருந்தால் ஒருவரை ஒருவர் உண்மையான, ஆத்ம துணையாக இருப்பார்கள்.
இவர்களுடைய திருமண வாழ்க்கையில் சமூகமான நிலையும், துணையுடன் விலைமதிப்பற்ற தருணங்களை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
மகர ராசிக்கான திருமண பொருத்தம்
சனி பகவான் ஆளக்கூடிய மகர ராசி நண்பர்களுக்கு திருமண வாழ்க்கையில் கன்னி, ரிஷபம் மற்றும் மகர ராசியை சேர்ந்த நண்பர்கள் மிகச்சிறந்த வாழ்க்கை துணையாக இருப்பார்கள்.
மகர ராசி சேர்ந்தவர்கள் தங்களுடைய துணை மீது அதிகமான கவனிப்பு மற்றும் நலப் புரிதல் கொண்டுவர்களாக இருப்பார்கள். இதனால் வாழ்க்கையில் சுமுகமாகவும், இணக்கமாக இருக்கும்.
மகர ராசியின் நேரம் மிகவும் விவேகமான நபர்களாகவும், எதார்த்தமான மற்றும் பாரம்பரியத்தை ஏற்றக்கூடிய நபர்களாக இருப்பார்கள். மேலே குறிப்பிட்ட ராசியில் இவர்களுக்கு பொருத்தமான நபர்களாக அமைவார்கள்.
கும்ப ராசிக்கான திருமண பொருத்தம்
சனி பகவானை அதிபதியாகக் கொண்ட மற்றொரு ராசி கும்பம். இந்த ராசியை நண்பர்களுக்கு மிதுனம், துலாம் மற்றும் தனுசு ராசி சேர்ந்தவர்கள் தெரிந்த திருமண வாழ்க்கை துணையாக இருப்பார்கள்.
இவர்களுடன் உறவு வாழ்நாள் முழுவதும் உறுதியாக நீடிக்கும். கும்ப ராசி சேர்ந்தவர்கள் தங்களுடைய திருமண உறவில் உற்சாகமான, மகிழ்ச்சியாகவும் செலவிட நினைப்பார்கள். மேலும் தங்கள் வாழ்க்கை துணையுடன் விலை மதிப்பற்ற தருணங்களை ரசிக்கக் கூடியதாக இருக்கும்.
மீன ராசிக்கான திருமண பொருத்தம்
குருபகவான் அதிபதியாக கொண்ட மீன அரசி அன்பர்களுக்கு நகரம், விருச்சிகம், கடகம் மற்றும் ரிஷப ராசியை சேர்ந்த நபர்கள் உங்களுடைய காதல் மற்றும் திருமண வாழ்க்கைக்கு பொருத்தமாக இருப்பார்கள்.
இந்த ராசியை சேர்ந்தவர்களை திருமணம் செய்யும்போது மீன ராசியினரின் திருமண உறவு மிகவும் சிறப்பானதாக அமையும்.
மகிழ்ச்சியான வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை இவர்கள் கண்டறிவதோடு பிறருக்கு உணர்த்தும் விதமாக வாழ்ந்து காட்டுவார்கள்.
